News
இந்த மாதிரி விஷயங்களை மு.க ஸ்டாலினால்தான் செய்ய முடியும்..பேசிய அண்ணாமலை..!
எப்போதும் தி.மு.க குறித்து விமர்சனங்களை வைப்பதைதான் முக்கிய வேலையாக கொண்டிருந்தார் பா.ஜ.கவின் மூத்த தலைவரான அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலை தற்சமயம் தி.மு.கவை பாராட்டி பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்தியாவில் மிகவும் போர் அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக பஹல்காம் தாக்குதல் இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்கிற திட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா. அதன்படி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. அந்த சமயத்தில் பல மாநிலங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தன. தமிழ்நாடு அரசும் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணி நடத்தியது.
இதுக்குறித்து பேசிய அண்ணாமலை பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தி.மு.க கட்சியிடம் நான் எந்த தவறையும் பார்க்கவில்லை. இந்தியா முழுக்க உள்ள முதலமைச்சர்களில் ஸ்டாலின் தான் பேரணி நடத்தினார். அந்த வகையில் தி.மு.கவை பாராட்டதான் வேண்டும் என கூறியுள்ளார் அண்ணாமலை.
தற்சமயம் பா.ஜ.கவில் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறியதால் அண்ணாமலை தி.மு.கவில் இணைய வாய்ப்புள்ளதா? என்கிற பேச்சு இதனால் துவங்கியுள்ளது.
