Tamil Cinema News
விஜய் நடத்துற பள்ளியில் ஹிந்தி இருக்கு.. ஆவணங்களோடு வந்த அண்ணாமலை.!
தற்சமயம் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக இருந்து வருகின்றது மும்மொழி கொள்கை என்கிற கொள்கையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை பாடத்திட்டங்களில் சேர்ப்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையாக இருக்கிறது.
இதனை எதிர்த்துதான் பலரும் பேசி வருகின்றனர். ஹிந்தி மொழியானது அவசியமென்றால் படிக்கும் மொழியாக தான் இருக்க வேண்டுமே தவிர அதை வற்புறுத்தக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனr.
இந்த நிலையில் பல அரசியல் தலைவர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய்யும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது நடிகர் விஜய் ஒரு சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஹிந்தி படிக்கலாம் அது இவர்களுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் படிக்க கூடாது என்று கூறுகிறார்கள் என்று இதுகுறித்து விஜய் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார் அண்ணாமலை.
