Connect with us

சம்பளம் கொடுத்த உடனேயே தோலில் கை போடுறாங்க!.. தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை!.. ஓப்பன் செய்த நடிகை!.

Ankita Lokhande

News

சம்பளம் கொடுத்த உடனேயே தோலில் கை போடுறாங்க!.. தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை!.. ஓப்பன் செய்த நடிகை!.

Social Media Bar

Bollywood Actress Ankita Lokhande : சினிமாவின் பெயர் அதிகமாக கெட்டுப் போவது இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயத்தால்தான். பெண்கள் மானத்துடன் வாழ முடியாத ஒரு துறை சினிமா துறை என்கிற பேச்சு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது.

அதற்கு தகுந்தார் போல விஷயங்களும் அடிக்கடி சினிமாவில் நடந்து வருகின்றன. நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை அவ்வப்போது பேட்டிகளில் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகை விசித்ரா தெலுங்கு சீரியல் உலகிற்கு நடிக்க சென்ற பொழுது அவருக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறியிருந்தார்.

அதற்கு தமிழ் திரைப்பட சங்கத்தில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் கூட எடுக்கப்படவில்லை. இப்படியான சூழல்தான் இன்றும் கூட தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்தும் வகையில் பாலிவுட் நடிகை ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சங்கீதா. இவர் பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் சுஷான் சிங்கின் முன்னாள் காதலியாக இவர் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் தென்னிந்திய சினிமா குறித்து பேட்டி அளிக்கும் பொழுது தென்னிந்திய தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார்கள். வந்த உடனேயே எனக்கான சம்பளத்தை பேசிவிட்டு எனது தோளில் கை போடுகிறார்கள்.

நான் படத்தில் நடிப்பதற்குதான் சம்பளம் வாங்குகிறேனே தவிர உங்களோடு படுப்பதற்கு கிடையாது என்று நான் கூறினால் என்னை படத்தில் இருந்து நீக்கி விடுவதாக கூறிவிடுகிறார்கள். இப்படி ஒரு தயாரிப்பாளர் மட்டுமில்லை ஐந்து ஆறு தயாரிப்பாளர்கள் இப்படித்தான் என்னிடம் நடந்து கொண்டார்கள்.

அதனால் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்கான ஆசையே எனக்குப் போய்விட்டது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் அங்கிதா. ஆனால் யார் அந்த தயாரிப்பாளர்கள் என்பதை மட்டும் அவர் குறிப்பிடவில்லை இது வேண்டுமென்று தென்னிந்திய சினிமா மீது தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்துவதற்காக இவர் பேசும் பேச்சு என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் அந்த தயாரிப்பாளர்கள் யார் என்பதை அங்கீதா கூறினால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

To Top