Connect with us

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் வசூல் நிலவரம்!.. முன்னணி நாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் அருண் விஜய்!..

ayalaan mission chapter one

News

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் வசூல் நிலவரம்!.. முன்னணி நாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் அருண் விஜய்!..

Social Media Bar

Ayalaan and Captain Miller : பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி 3 திரைப்படங்கள் தமிழில் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகின. ஆனால் அதில் ஒரு திரைப்படம் யாராலும் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்று கூறலாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. அயலான் திரைப்படத்திற்கு வெகு நாட்களாகவே அதிக வரவேற்பு இருந்து வந்தது அதே போல தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் அதே நாளில் வெளியானது சிவகார்த்திகேயனுடன் போட்டி படவே தனுஷ் இதை செய்தார் என்று பேச்சுக்கள் இருந்தன.

இதற்கு நடுவே இந்த இரண்டு படங்களுடன் போட்டியாக மிஷன் சாப்டர் ஒன் என்கிற அருண் விஜய்யின் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை.

captain miller ayalaan
captain miller ayalaan

சொல்லப்போனால் அயலான் திரைப்படத்திற்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் தான் அதிகமான திரையரங்குகள் கிடைத்தன இருந்தாலும் கூட நம்பிக்கையை இழக்காத அருண் விஜய் கிடைத்த 80 திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டார்.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு திரையரங்குகள் அதிகரித்ததன் காரணமாக பொங்கல் தின போட்டியில் மிஷன் திரைப்படமும் சேர்ந்தது. அந்த வகையில் கேப்டன் மில்லர் இதுவரை உலக அளவில் 65 கோடியும் இந்திய அளவில் 50.5 கோடிக்கும் வசூல் செய்து இருக்கிறது.

அயலான் திரைப்படத்தை பொறுத்தவரை இந்திய அளவில் 50 கோடிக்கும் உலக அளவில் 64 கோடிக்கும் ஓடி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இது அயலான் திரைப்படத்திற்கு நஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.

மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தை பொறுத்தவரை உலக அளவில் 20 கோடிக்கு வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அளவு ஓடி இருப்பதே இந்த படத்திற்கு பெரும் வெற்றி தான் என்று கூறப்படுகிறது. எனவே ஒப்பிட்டு அளவில் பார்க்கும் பொழுது இந்த வசூல் குறைவாக தெரிந்தாலும் கூட படத்தின் தயாரிப்பு ரீதியாக பார்க்கும் பொழுது மூன்று திரைப்படங்களில் அதிக வசூல் படைத்த திரைப்படமாக மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் தான் பார்க்கப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top