ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு கேப்பேன்? – இயக்குனரை காண்டாக்கிய பாரதி ராஜா!

தமிழின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. ஆனால் வயதாகிவிட்டதால் தற்சமயம் எந்த படத்தையும் பாரதி ராஜா இயக்குவதில்லை. ஆனால் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இதை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற்று வருகிறார் பாரதி ராஜா. தற்சமயம் அருள்நிதி நடிக்கும் திருக்குறள் என்கிற திரைப்படத்தில் பாரதி ராஜா நடித்து […]

Continue Reading

தெலுங்கில் வேண்டாம் என மறுத்து தமிழில் ஹிட் அடித்த பாடல்?

எப்போதும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் அனைத்து பாடல்களுமே திரையில் வருவதில்லை. பல பாடல்கள் தயாரிப்பாளருக்கு, இயக்குனருக்கு பிடிக்காத காரணத்தால் வெளிவராமல் இருந்ததுண்டு. அப்படி ஒரு இயக்குனரால் நிராகரிக்கப்படும் பாடல் வேறொரு படத்தில் வெளியாகி ஹிட் அடிக்கும் நிகழ்வுகளும் சினிமாவில் நடந்துள்ளன. தமிழில் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2008 காலக்கட்டத்தில் இவர் தெலுங்கில் ஒரு படத்திற்கு இசையமைத்து கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் இயக்குனர் படத்தில் ஒரு ஐட்டம் சாங் வேண்டும் […]

Continue Reading

பல இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடிய பிரபலமான பாடல்? – எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை போலவே பாடல்களுக்கும் கூட எல்லா காலங்களிலும் முக்கியத்துவம் இருந்துள்ளது. இளையராஜா காலங்களில் அவர் இசைக்காக ஓடிய திரைப்படங்கள் ஏராளம். இசையமைப்பாளர்களுக்கும் இடையே கூட போட்டிகள் நிலவி வருவதாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் உண்டு. ஆனால் இசையமைப்பாளர்கள் இடையே பெரிதாக போட்டிகள் இருந்தது கிடையாது. தமிழ் சினிமாவில் சில பாடல்கள் தனித்துவமானதாக இருக்கும். வேறு எந்த பாடலையும் விட அந்த பாடலில் புதிதாக ஒன்று முயற்சிக்கப்பட்டிருக்கும். அப்படி பல இசையமைப்பாளர்கள் […]

Continue Reading

ரெண்டு தடவை படமாக்கப்பட்ட காதலிக்க நேரமில்லை? – இதுதான் காரணமாம்!

1964 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்போதைய காலக்கட்டத்தில் கூட பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட திரைப்படம். இந்த திரைப்படத்தை படமாக்க நினைத்தபோது இயக்குனர் ஸ்ரீதர் வேறு கதையைதான் வைத்திருந்தாராம். சிறிது படமாக்கி பார்த்த பிறகு அந்த படம் அவ்வளவாக ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் மொத்த கதையையும் மாற்றினாராம் ஸ்ரீதர். கதையை மாற்றியது முதல் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தாராம் ஸ்ரீதர். படத்தில் […]

Continue Reading

சினிமாவுக்கு வர்றது என் ஆசை கிடையாது! – அஜித்தின் உண்மையான கனவு என்ன தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தற்சமயம் அவருக்கென்று மிகப்பெரும் ரசிக பட்டாளாமே தமிழகத்தில் உள்ளது. ஆனால் ஆரம்பக்கட்டத்தில் அஜித் சினிமாவிற்கு வந்தது ஒரு எதிர்பாராத விதமாகதான் என அஜித் ஒரு பழைய பேட்டியில் கூறியுள்ளார். சின்ன வயதிலேயே அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாத காரணத்தால் ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங் துறையை நோக்கி சென்றார். ஏனெனில் அப்போதில் இருந்தே அஜித்க்கு கார், பைக் மீதுதான் அதிக ஈர்ப்பு இருந்துள்ளது. சென்னையில் ஒரு பைக் நிறுவனத்தில் வேலை […]

Continue Reading

மஞ்சள் உடை தேவதை! – அரபு உடையில் கல்யாணி ப்ரியதர்ஷன்!

2000களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் ப்ரியதர்ஷன் முக்கியமானவர். நடிகை த்ரிஷாவை சினிமாவிற்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவரது மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன். திடீரென சினிமாவின் மேல் ஈர்ப்பு வந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். இதையடுத்து புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் […]

Continue Reading

சண்டை படம் மட்டும் வேணும்னா சினிமா எப்படி விளங்கும்? – ஹீரோக்களை அப்பொழுதே கேள்வி கேட்ட பாலச்சந்தர்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரும் நடிகர்களை தமிழ் சினிமாவில் வளர்த்துவிட்ட பெருமை பாலச்சந்தரையே சாரும். அதே போல பெண்களை மட்டும் முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது வரை பல நாடகங்களில் தைரியமான பெண்களாக காட்டப்படும் பெண்கள், கிட்டத்தட்ட பாலச்சந்தர் படத்தில் வரும் பெண்களை ஒத்திருப்பதை காணலாம். ஆனால் சினிமா துறை வளர்ந்த பிறகு அப்படியான படங்கள் எடுப்பதற்கான […]

Continue Reading

ரொம்ப பொறுமையா வேலை பாக்குறீங்க? – ரஹ்மான் மீது வைரமுத்து வைத்த குற்றச்சாட்டு!

சினிமாவிற்கு ஏ.ஆர் ரகுமான் வந்த ஆரம்பக்காலம் முதலே வைரமுத்து அவருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். இருவரும் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக நட்பில் இருந்து வருகின்றனர். சினிமாவிற்கு வந்த சமயத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர் ரகுமானின் புகழ் இந்திய சினிமா முழுவதும் பரவியது. ஆனால் அதற்கு பிறகு இசையமைத்த படங்களுக்கு எல்லாம் மிகவும் தாமதமாக இசையமைத்து கொடுத்தார் ஏ.ஆர் ரகுமான். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் […]

Continue Reading

நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க – மணிரத்னம் ஏ.ஆர் ரகுமான் குறித்து வைரமுத்து குற்றச்சாட்டு!

ஏ.ஆர் ரகுமான், மணிரத்னம், வைரமுத்து காம்போ என்பது 25 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்து வரும் ஒரு கூட்டணி ஆகும். ரோஜாவில் துவங்கி பல படங்கள் இவர்கள் மூவரும் ஒன்றாகவே பயணித்தனர். இறுதியாக வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மட்டும் பாடலாசிரியரை மாற்றியிருந்தனர்.  இவர்கள் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு வந்த திரைப்படம்தான் ஓ காதல் கண்மணி. ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. அந்த படத்தில் மெண்டால் மனதில் என்ற பாடலுக்கு மட்டும் […]

Continue Reading

எனக்கு சப்போர்ட் பண்ணா நீ தோத்துறவ? –  பாக்கியராஜை நிராகரித்த எம்.ஜி.ஆர்!

தமிழின் பழைய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராய் இருந்த இவர் மிக குறுகிய காலத்திலேயே இயக்குனராகி பிறகு கதாநாயகனாகவும் ஆனார். தனிப்பட்ட திரைக்கதையாக்கும் இவரது திறனே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மீது பெரும் அன்பு கொண்டவர். அவரது பல படங்களில் கூட எம்.ஜி.ஆரை காட்டும் விதத்தில் காட்சிகள் வைத்திருப்பார். அவசர போலீஸ் 100 என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கை மகனாக பாக்கியராஜ் நடித்திருப்பார். பாக்கியராஜின் படங்கள் வெளியாவதற்கு […]

Continue Reading

என்னையவா டிஸ்டர்ப் பண்றிங்க? – போலீஸ்க்கு போன் போட்ட மணி சார்!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் மீது மக்களுக்கு தனி மரியாதை உண்டு. சினிமா துறையில் அவர்களது திறமையை கண்டு பலரும் அவர்களுக்கு ரசிகர்களாக ஆவது உண்டு. அதே போல தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலரும்  மணிரத்னத்திற்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு மணிரத்னத்துடன் மன கசப்பு ஏற்படும் வகையில் ஒரு இயக்குனருக்கு சில சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. தமிழில் சில படங்கள் மட்டும் எடுத்துள்ள இயக்குனர்தான் சாந்தக்குமார், இவர் மெளனகுரு மாதிரியான […]

Continue Reading

ஊழியரை தயாரிப்பாளராக மாற்றிய ஜெய் சங்கர்? – யார் அந்த தயாரிப்பாளர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஆரம்பக்காலக்கட்டங்களில் இப்போது இருப்பது போல சினிமா இருக்கவில்லை. பல நடிகர்கள் உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர்களாக இருந்தனர். அதில் முக்கியமான நடிகர் ஜெய்சங்கர். ஒரு நடிகராக பலருக்கும் ஜெய் சங்கரை தெரிந்திருக்கும். ஆனால் அவர் பல இயக்குனர்களுக்கு உதவி செய்துள்ளார். ஜெய்சங்கர் காலத்தில் ஏ.எல்.எஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நிறுவனத்தை சீனிவாசன் என்பவர் நடத்தி வந்தார். நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியாக வீரய்யா என்பவர் இருந்தார். இந்த நிலையில் ஒரு […]

Continue Reading