சினிமாவுக்கு வர்றது என் ஆசை கிடையாது! – அஜித்தின் உண்மையான கனவு என்ன தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தற்சமயம் அவருக்கென்று மிகப்பெரும் ரசிக பட்டாளாமே தமிழகத்தில் உள்ளது.

ஆனால் ஆரம்பக்கட்டத்தில் அஜித் சினிமாவிற்கு வந்தது ஒரு எதிர்பாராத விதமாகதான் என அஜித் ஒரு பழைய பேட்டியில் கூறியுள்ளார். சின்ன வயதிலேயே அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாத காரணத்தால் ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங் துறையை நோக்கி சென்றார்.

ஏனெனில் அப்போதில் இருந்தே அஜித்க்கு கார், பைக் மீதுதான் அதிக ஈர்ப்பு இருந்துள்ளது. சென்னையில் ஒரு பைக் நிறுவனத்தில் வேலை பார்த்த அஜித் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு 4 வருடம் பணிபுரிந்த பிறகு சொந்தமாக கார்மெண்ட்ஸ் துவங்க வேண்டும் என்கிற தனது கனவை நோக்கி சென்றுள்ளார். ஆனால் அவர் துவங்கிய கார்மெண்ட்ஸ் தோல்வி அடையவே அப்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும், சினிமாவிற்கு வந்துவிட்டார்.

இதையெல்லாம் பேட்டியில் கூறிய அஜித், நான் ஒரு நடிகனாக இருந்தாலும் சொந்தமாக கார்மெண்ட்ஸ் துவங்க வேண்டும் என்பதே என் ஆசை என கூறியுள்ளார்.

Refresh