News
ஆஸ்கருக்கு தேர்வான ஆர்.ஆர்.ஆர் பாடல்! – மகிழ்ச்சியில் இயக்குனர்!
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்
இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் இதில் நடித்திருந்தனர். இந்த படம் பல விருதுகளை வாங்கியது.

இந்நிலையில் வருகிற 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல்களுக்கான பட்டியலில் இந்த படத்தில் வரும் நாட்டு கூத்து எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என வெகுவாக போராடி வந்தார் இயக்குனர் ராஜமெளலி. இந்த நிலையில் ஆஸ்கர் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் இடம்பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ராஜமெளலி.
மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் வந்ததே அதற்கான சிறந்த அங்கீகாரம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
