News
போட்டோ எடுக்க வந்த ரசிகரை அடித்த பிரபலங்கள்.. லிஸ்ட்ல ஆண்டவரும் இருக்கார்!..
சினிமாவை குறித்த மோகம் மக்களிடையே அதிகம் நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். சினிமா நடிகர், நடிகைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொள்வதும், அதற்கும் மேலாக அரசியலில் நிற்பதற்கான பல வழிகளை இந்த சினிமா அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தான். இந்நிலையில் பிரபலங்கள் வெளியில் எங்காவது சென்றால் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு செல்பி எடுப்பார்கள்.
பிரபலங்களை சூழ்ந்து அவர்களுடன் செல்பி எடுக்கும் போது, திடீரென்று கோவப்பட்ட பிரபலங்கள் ரசிகர்களை சில சமயங்களில் அடிப்பது உண்டு. அது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் ரசிகர்களை அடித்த பிரபலங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலையா

தெலுங்கு படங்களில் முன்னணி நடிகராக நடித்து வரும் இவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. ஆனால் இவரை அனைவரும் பாலையா என்று தான் அழைப்பார்கள். 2017 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார்கள். அப்பொழுது ஒரு ரசிகர் அனைவரையும் தள்ளி விட்டு பாலையா மீது இடித்தார். இதனால் கோபப்பட்ட பாலையா அவரை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்.
கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ஒருமுறை ஒரு கடையின் திறப்பு விழா கூட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு வெளியே வந்த கமலை நோக்கி ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க சென்றார். உடனே கோபப்பட்ட கமல்ஹாசன் அந்த ரசிகரை கன்னத்தில் அறைந்து விட்டு வேகமாக காரில் ஏறி சென்று விட்டார்.
மோகன்லால்

மலையாள உலகின் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருப்பவர் மோகன்லால். கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பாட்டு பாடி கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக மேடை மீது ஏறிய நபர் ஒருவரை, மோகன்லால் வேகமாக மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.
