Cinema History
நகைச்சுவை நடிகரின் கதையை திருடி படமாக்கிய இயக்குனர்!.. என்ன கொடுமை சார் இது!.
Actor supergood Supramani : சினிமாவை பொறுத்தவரை உண்மையாக கதை எழுதி படம் எடுக்கும் உண்மையான கலைஞர்களும் உண்டு. அதே சினிமாவில்தான் கதைகளையும், காட்சிகளையும் திருடி படம் எடுக்கும் இயக்குனர்களும் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் கூட அப்படியான கதையை காபி அடிக்கும் இயக்குனர்கள் உண்டு. உதாரணத்திற்கு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த மெமொண்டோ என்கிற திரைப்படத்தின் கதைதான் என கூறப்பட்டது.
ஆனால் அந்த இயக்குனரிடம் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் கதையை படமாக்கியிருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படி பல சம்பவங்கள் தமிழ் சினிமாவிலும் நடந்துள்ளது. ஆனால் கனவுகளோடு வரும் நபர்களின் கதையை திருடி படமாக்கும்போது அது அவர்கள் வாழ்க்கையையே நாசமாக்கிவிடுகிறது.
தமிழில் காமெடி நடிகர் ஒருவருக்கும் இந்த மாதிரியான சம்பவம் நடந்தது. நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கு இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அப்போது அவர் ஒரு கதையையும் கையில் வைத்திருந்தார்.
அதை பலரிடமும் கூறி வாய்ப்புகளை கேட்டு வந்தார். அந்த கதைப்படி இதய நோய் இருக்கும் காதலிக்காக தனது இதயத்தையே கொடுப்பார் காதலன். இந்த கதையை கேள்விப்பட்ட இயக்குனர் ஒருவர் அதை அப்படியே படமாக்கினார்.
இதனால் கடுப்பான சூப்பர்குட் சுப்பிரமணி இதுக்குறித்து அந்த இயக்குனரிடம் கேட்டப்பொழுது எல்லோரும் அது உன் கதைன்னு சொல்லுறாங்க. ஆனா நான் கேள்விப்பட்டதே இல்லையே என கையை விரித்துள்ளார். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்