Connect with us

திடீர்னு குரல் வந்தததும் பயந்துட்டுங்கய்யா!.. பிக் பாஸையே பங்கம் செய்த கூல் சுரேஷ்…

cool suresh biggboss 7

Bigg Boss Tamil

திடீர்னு குரல் வந்தததும் பயந்துட்டுங்கய்யா!.. பிக் பாஸையே பங்கம் செய்த கூல் சுரேஷ்…

Social Media Bar

விஜய் டிவியில் எப்போதும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தொடரின் ஏழாவது சீசன் இன்று துவங்கியுள்ளது. பிக் பாஸில் இந்த முறை இரண்டு வீடுகள் இருப்பதாகவும் இரண்டு வீடுகளிலும் 9 நபர்கள் என மொத்தமாக 18 நபர்கள் பங்கேற்பதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த 18 நபர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வரவில்லை. இதனை அடுத்து மக்களுக்கு சில வயூகங்கள் இருந்தன. அந்த யூகங்களில் கூல் சுரேஷ் பெயரும் இருந்தது .

தற்சமயம் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் சென்றுள்ளார். இந்த வாரத்திற்கான கேப்டன் உரிமையை கூல் சுரேஷிற்கு வழங்கியுள்ளனர். வரும்போதே பிக் பாஸ் பேசியதை கேட்டு பக்குன்னு ஆயிட்டு என அவரையே கலாய்த்தார் கூல் சுரேஷ். தமிழ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் கூல் சுரேஷ்.

கூல் சுரேஷ் சமூக வலைதளங்களிலேயே காமெடியாக ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பார். சமூக வலைத்தளங்களில் கூல் சுரேஷ் செய்யும் காமெடிகள் மிகவும் பிரபலமானவை, வாரத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு காமெடி செய்து கொண்டிருப்பார்.

 எந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டாலும் அங்கு சென்று விடுவார் கூல் சுரேஷ். தற்சமயம் பிக் பாஸிற்கு இவர் வந்திருப்பது அந்த நிகழ்ச்சியை இன்னும் சுறுசுறுப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரை இந்த வாரத்தில் கேப்டனாக தேர்ந்தெடுத்து இருப்பதால் நிச்சயம் ஏதாவது சம்பவம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

To Top