Connect with us

எனக்கு ஆடிக்கிட்டே பாட்டு சொல்லி கொடுத்தார்… டி.ஆர் செயலால் ஆடிபோன கே.ஜே யேசுதாஸ்!.

T rajendran

Cinema History

எனக்கு ஆடிக்கிட்டே பாட்டு சொல்லி கொடுத்தார்… டி.ஆர் செயலால் ஆடிபோன கே.ஜே யேசுதாஸ்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் சில பிரபலங்களை பற்றி மட்டும் எப்போதும் சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். தமிழில் சுவாரஸ்யம் குறையாக பிரபலங்களில் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்திரன்.

டி ராஜேந்திரன் மிகவும் ரசித்து சினிமாவில் படம் இயக்கக் கூடியவர். அதனால் அவர் இயக்கும் திரைப்படங்களின் பொழுது உணர்ச்சிவசப்பட்டு பல விஷயங்களை செய்து விடுவார். அந்த வகையில் உயிர் உள்ளவரை உஷா திரைப்படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை கே ஜே ஏசுதாஸ் பகிர்ந்து இருந்தார்.

டி ராஜேந்திரனுக்கு இசையிலும் நல்ல ஞானம் உண்டு. அவரது பல திரைப்படங்களுக்கு அவரே இசையமைத்துள்ளார். சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு அதிக துறைகளில் பணிபுரிந்தவர் டி ராஜேந்திரனாகதான் இருக்கும்.

அந்த அளவிற்கு அனைத்து துறைகளின் மீதும் ஈடுபாடு கொண்டவர். உயிருள்ளவரை உஷா திரைப்படத்திற்கும், டி ராஜேந்திரன்தான் இசையமைத்தார். அதில் வைகை கரை காற்றே என்கிற ஒரு பாடல் அப்போது மிகவும் பிரபலமாகும்.

அந்த பாடலை கே ஜே ஏசுதாஸ் தான் பாடினார். அவரிடம் அந்தப் பாடல் இப்படி வர வேண்டும் என்பதை டி ராஜேந்திரன் பாடி காட்டும் பொழுது அதற்கு ஏற்றார் போல நடனம் ஆடிக்கொண்டே கண்ணை மூடிக்கொண்டு அந்த இசையை ரசித்துக் கொண்டே பாடி காட்டினாராம். அதைப் பார்த்து அப்பொழுது கே ஜே ஜேசுதாஸ் திகைத்துள்ளார்.

அதை கே ஜே ஏசுதாஸ் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த அளவிற்கு சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடியவர் டி.ஆர் என்று அவருடன் பணிபுரிந்த பலரும் கூறியுள்ளனர்…

To Top