Connect with us

என் அப்பாவை அப்படி கேட்டேன்.. எந்த ஒரு மகளும் கேட்காத கேள்வி.. பிக்பாஸ் தர்ஷிகா கூறிய விஷயம்.!

darshika

Tamil Cinema News

என் அப்பாவை அப்படி கேட்டேன்.. எந்த ஒரு மகளும் கேட்காத கேள்வி.. பிக்பாஸ் தர்ஷிகா கூறிய விஷயம்.!

Social Media Bar

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் மிக முக்கியமானவர் தர்ஷிகா. தர்ஷிகாவை அதற்கு முன்பு பெரிதாக மக்களுக்கு தெரியாது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. முக்கிய அடையாளமாகவும் அமைந்தது. அதன் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் அனைவர் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் தர்ஷிகா என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து சினிமாவில் சாதனை செய்ய வேண்டும் என்பது தர்ஷிகாவின் ஆசையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் தனது தந்தை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனது அப்பாவை நான் நேரில் பார்த்ததே இல்லை.

தர்ஷிகா கூறிய விஷயம்:

darshika

darshika

நான் சிறுவயதாக இருக்கும் பொழுது அவர் இறந்துவிட்டார். அதனால் அவரது முகம் கூட எனக்கு மறந்துவிட்டது ஒரு சமயம் ஒரு கல்யாண வீடியோவை எங்கள் வீட்டில் போட்டனர்.

அந்த வீடியோவில் எனக்கு பக்கத்தில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவர் யார் என்று தெரியாமல் எனது அம்மாவை கேட்டேன். அப்பொழுதுதான் அவர் எனது அப்பா என்று கூறினார்கள். அந்த அளவிற்கு அவரது முகம் எனக்கு மறந்து விட்டது என்று கூறியிருக்கிறார் தர்ஷிகா.

Articles

parle g
madampatty rangaraj
To Top