Deadpool and Wolverine: மார்வெல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து மல்டி வெர்ஸ் என்னும் கதைக்களம் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது மார்வெல் நிறுவனம். லோகி சீரிஸ் முழுமையாக மல்டி வெர்ஸை முக்கியமாக வைத்து எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து மல்டி வெர்ஸை வைத்து படங்கள் வர துவங்கியுள்ளன.
தற்சமயம் வெளிவந்த மார்வெலஸ் திரைப்படத்திலும் இறுதியில் மல்டிவெர்ஸோடு தொடர்புப்படுத்தி முடித்திருக்கின்றனர். ஏனெனில் அடுத்த வருடம் வரவிருக்கும் அவெஞ்சர்ஸ் காங் டைனஸ்டி திரைப்படத்தில் வரும் காங் கதாபாத்திரம் ஒவ்வொரு வெர்ஸாக தாவ கூடியவன் என்பதால் மல்டிவெர்ஸ் கதையமைப்பில்தான் எல்லா கதையும் செல்லும் என கூறப்படுகிறது.

அதற்கு தகுந்தாற் போலவே டெட் பூல் கதையும் மல்டிவெர்ஸ் கதையமைப்பில் வந்துள்ளது. இந்த கதை முழுக்க முழுக்க வேறு யுனிவர்ஸில் நடக்கிறது. இந்த கதையில் டெட் பூல் எக்ஸ் மேன் கூட்டணியில் இருக்கிறார். இந்த படத்தில் இறந்துப்போன வோல்வெரின் கதாபாத்திரமும் வருகிறார்.
அதாவது நம் உலகில் வோல்வரின் இறந்து போனாலும் வேறும் யுனிவர்ஸில் உயிருடன் இருக்கிறார். பொதுவாகவே டெட்பூல் காமெடியான கதாபாத்திரம் என்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம். எனவே கண்டிப்பாக இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






