Tamil Cinema News
இளையராஜா படத்தை எடுத்தே ஆகணும்.. டெல்லி வரை சென்ற தனுஷ்..!
வெகு காலங்களாகவே நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் வெறும் ஆக்ஷன் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் தற்சமயம் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
அதே மாதிரி வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் மாதிரியான இயக்குனர்கள் படங்களுக்கு இவர் முன்னுரிமை அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவரே இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. அதே மாதிரி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.
இதற்கு முன்பே அவர் கமிட்டான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது பெரிய பிரச்சனையானது. இதனை அடுத்து அட்வான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு அவர் படம் நடித்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அப்படியே தனுஷும் நடித்து கொடுப்பதாக ஒப்பு கொண்டார்.
படத்தில் வந்த பிரச்சனை:
இந்த நிலையில் தனுஷ் இதற்கு முன்பே கமிட்டான திரைப்படம் இளையராஜா. இந்த திரைப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இளையராஜா திரைப்படம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் அதில் நடிப்பதற்கு தனுஷும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்சமயம் தனுஷிற்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த தயாரிப்பாளர் இளையராஜா திரைப்படத்தை நிறுத்தி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என தனுஷ் முடிவு எடுத்துள்ளார்.
எனவே பாலிவுட் பக்கம் போய் இந்த படத்திற்கு தயாரிப்பாளரை தேடி வருகிறாராம் தனுஷ். எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக இளையராஜா படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.