சம்பளத்துல கறரான ஆளு நயன்தாரா? – தனுஷ் தந்த பேட்டி!

கடந்த 18 ஆம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நடிகை நயன்தாராவிற்கும் தனுஷ்க்கும் நல்ல நட்புண்டு இருவரும் இணைந்து யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

யாரடி நீ மோகினி திரைப்படம் வந்த சமயத்தில் நயன்தாரா, தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவில் மிகவும் பெரிய இடத்தை எல்லாம் பிடிக்கவில்லை. இருவருமே அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களாக இருந்தனர்.

அப்போது அவர்கள் இருவரையும் பேட்டி எடுத்தனர். அதில் நயன்தாராவிற்கும், தனுஷ்க்கும் படத்தில் கெமிஸ்ட்ரி எந்த அளவு வெர்க் அவுட் ஆகியுள்ளது என கேட்கப்பட்டது. படத்தை பார்க்கும் அனைவரும் நல்ல வகையில் வந்துள்ளது என்றுதான் கூறுகிறார்கள் என கூறினார் நயன்.

உடனே தனுஷ் அவங்க கெமிஸ்ட்ரியில் கொஞ்சம் வீக், ஆனால் கணக்கில் நல்ல ஸ்ட்ராங் என அவர் சம்பளத்தை சரியாக பெற்றுவிடுவதை குறிப்பிட்டார். வளர்ந்து வரும் நிலையிலேயே நயன்தாரா தனது சம்பள விஷயத்தில் மிகவும் சரியாக இருந்துள்ளார் என தெரிகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh