மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருடன் கூட்டணி சேரும் தனுஷ்!.. இப்போதே துண்டை போட்டுட்டாராம்..

Dhanush : தற்சமயம் சினிமாவில் இயக்குனர்களுக்கான காலம் என்பது உருவாகி இருக்கிறது. ஒரு இயக்குனர் ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுத்து விட்டார் என்றால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்கின்றன.

மேலும் அவருக்கான சம்பளம் என்பதும் மிகவும் அதிகரிக்கிறது. லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் நீல் போன்ற இயக்குனர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் அப்படியான வாய்ப்பையும் வரவேற்பையும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரம் பி பொடுவல் பெற்று இருக்கிறார்.

MANJUMMEL-boys
MANJUMMEL-boys
Social Media Bar

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்த விஷயம். சமூக வலைதளங்களில் தொடங்கி திரையரங்குகள் வரை எங்கு சென்றாலும் அந்த திரைப்படம் குறித்த பேச்சுக்களை பார்க்க முடிகிறது.

தனுஷுற்கு வந்த கதை:

இந்த நிலையில் தமிழ் தயாரிப்பாளர்கள் பலரும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரத்தை வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் தற்சமயம் தனுஷை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு சிதம்பரம் பி பொடுவல் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாகவே நடிகர் தனுஷ் வித்தியாசமான கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார். வழக்கமான ஆக்ஷன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் அல்ல தனுஷ். அசுரன் மாதிரியான திரைப்படங்களிலேயே அவருடைய வித்தியாசமான நடிப்பை பார்த்திருக்க முடியும்.

Dhanush
Dhanush

இதனால் இயக்குனர் எந்த மாதிரியான கதை வைத்திருக்கிறாரோ அதற்கு தகுந்தார் போல தனுஷ் நடிப்பார் என்பதால் இயக்குனருக்கும் தனுசுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த திரைப்படம் நல்லவிதமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் கூட தனுஷும் இந்த இயக்குனரும் ஒன்றிணைந்தால் அது சிறப்பாக இருக்கும் என்பது தமிழ் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.