ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த். நடிகர் பிரசாந்த் போலவே இவரும் சினிமாவிற்கு வந்தப்போது ஒரு சாக்லெட் பாயாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஏனெனில் இப்போது வரை ஸ்ரீ காந்துக்கு ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு மாதிரியான திரைப்படங்கள்தான் ஒரு அடையாளமாக இருந்து வருகின்றன. அவை இரண்டுமே காதல் கதையமைப்பை கொண்ட படங்களாக இருந்தன.
ஆனால் ஆக்ஷன் திரைப்படம் என வரும்போது பம்பர கண்ணாலே மாதிரியான படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தின. இருந்தாலும் போஸ் மாதிரியான சில படங்கள் அப்போதும் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுக்கவே செய்தன.
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது. பிறகு துணை கதாபாத்திரம் கிடைத்தாலும் பரவாயில்லை என வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அந்த சமயத்தில்தான அவருக்கு நண்பன் திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வெகு வருடங்கள் கழித்து தற்சமயம் தினசரி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிந்தியா லோர்டே என்பவர் தயாரிக்கிறார்.
இவர்தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் அந்த அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். அதுக்குறித்து சிந்தியா கூறும்போது இளையராஜா சாரை முதன் முதலாக பார்த்தப்போது சந்தோஷமாக இருந்தது.
அவர் எங்களிடம் ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் லேட் ஆகுது போகலாமா என்றார். உடனே இளையராஜா அப்படி சீக்கிரமா போய் என்ன பண்ண போறீங்க என கேட்டார். உடனே நான் சார் உங்களோடு ஒரு நாள் இல்லை ஒரு வாரம் இருப்பதாக இருந்தாலும் எனக்கு ஓ.கே என்று கூறினேன். உடனே இளையராஜா சிரித்தார் என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.






