Connect with us

பிட்டு படத்துல நடிச்சிட்டோமேன்னு ஊரை காலி பண்ணிட்டு கிளம்புனேன்!.. தளபதிதான் போன் பண்ணாரு!.. தினேஷ் மாஸ்டருக்கு நடந்த சம்பவம்!.

dinesh master vijay

News

பிட்டு படத்துல நடிச்சிட்டோமேன்னு ஊரை காலி பண்ணிட்டு கிளம்புனேன்!.. தளபதிதான் போன் பண்ணாரு!.. தினேஷ் மாஸ்டருக்கு நடந்த சம்பவம்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே டான்ஸ் மாஸ்டராக இருந்து வருபவர் தினேஷ் மாஸ்டர். குறிப்பாக நடிகர் விஜய்யுடன் வெகு காலங்களாக இவர் பயணித்து வருகிறார். ஷாஜஹான், யூத் மாதிரியான திரைப்படங்களில் விஜய் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்தவர் தினேஷ் மாஸ்டர்.

இறுதியாக வந்த லியோ திரைப்படத்திலும் அவர்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஒரு குப்பை கதை.

இந்த படத்தில் கதாநாயகன் தெருக்களில் குப்பைகளை அள்ளும் தூய்மை பணியாளராக இருந்து வருவார். அவரை திருமணம் செய்துக்கொண்டு வந்த பெண் அவரை விரும்பாமல் ஆடம்பரமாக இருக்கும் வேறொரு நபரை நேசித்து வருவார். பிறகு காசு பணம் நிம்மதியான வாழ்க்கையை தராது என்பதை அறிந்து அவர் கணவனுடன் ஒன்று சேருவதாக கதை இருக்கும்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து எனக்கு பெரிய பயம் இருந்தது. கொஞ்சம் பிசுறு தட்டினாலும் இந்த படம் ஒரு ப்ளூ படமாகிவிடும். இந்த பயத்தாலேயே நான் படம் வெளியான அன்று வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றுவிட்டேன் என்கிறார் தினேஷ் மாஸ்டர்.

மேலும் அவர் கூறும்போது அப்போது விஜய்தான் எனக்கு போன் செய்து என்னப்பா உங்க படம் நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க என கேட்டார். அப்போதுதான் எனக்கே சரி நம் படம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது என நம்பிக்கை வந்தது என்கிறார் தினேஷ் மாஸ்டர்.

To Top