Connect with us

நான் ஒன்னும் உங்கக்கிட்ட பிச்சை கேட்கலை!.. சங்க தலைவருக்கு அமீர் கொடுத்த சரவெடி பதில்!..

ameer sivasakthipandiyan

News

நான் ஒன்னும் உங்கக்கிட்ட பிச்சை கேட்கலை!.. சங்க தலைவருக்கு அமீர் கொடுத்த சரவெடி பதில்!..

Social Media Bar

Director Ameer Tamil cinema : கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அமீர் பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது.

பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியான காலம் முதலே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. 17 வருடங்களாக இதற்காக போராடி வருகிறார் இயக்குனர் அமீர். ஆனால் பெரிதாக இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும்பொழுது அமீரை மிகவும் மோசமாக பேசியதின் விளைவாக இந்த பிரச்சனை தற்சமயம் வெளியில் வெடித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த சிவசக்தி பாண்டியன் பேசும் பொழுது அமீர் (Director Ameer) தன்னுடைய சங்கத்தை வந்து நாடவே இல்லை என்றும் அவர் எடுத்த உடனே நீதிமன்றம் போய்விட்டார் என்றும் பேசியிருந்தார். மேலும் அவருக்கு எவ்வளவு தொகை ஞானவேல் ராஜா (producer Gnanavel Raja) கொடுக்க வேண்டும் என்பது கூட எங்களுக்கு தெரியாது என்பதாக அவர் கூறியிருந்தார்.

ameer1
ameer1

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் ஒரு பேட்டி வழங்கியுள்ளார். அதில் அமீர் கூறும் பொழுது இந்த படத்தை நான் சென்சாரில் பதிவு செய்யும் பொழுது என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்தேன்.

அதை மாற்றி அதற்கான உரிமையை மாற்றிக் கொடுக்க வைத்ததே தயாரிப்பாளர் சங்கம்தான். அதன் பிறகும் கூட நான் தயாரிப்பாளர் சங்கத்தில் தான் இதுகுறித்து கேட்டு வந்தேன் ஆனால் சிவகுமாரையோ (Actor Sivakumar) ஞானவேல் ராஜாவையோ அவர்களால் சந்தித்து பேச முடியவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் கை விரித்த பிறகுதான் நீதிமன்றத்தை தேடி போனேன்.

தொடர்ந்து பொய்யான தகவல்களை நீங்கள் அளித்து வரும் நிலையில் இது குறித்து தேவையான ஆவணங்களை வரும் காலத்தில் வெளியிடுவேன் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார் அமீர். மேலும் உங்களிடம் நான் யாசகம் கேட்கவில்லை என்னுடைய பணத்தை தான் நான் கேட்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் அமீர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top