கண்ணதாசன் பையனை பார்த்து கேக்குற கேள்வியா இது!. பாலா கேட்ட அந்த ஒரு கேள்வி!.

தமிழ் திரையுலகில் கவிஞர்கள் என கூறினால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசனுக்கு பிறகுதான் கவிஞர் வாலி வைரமுத்து அனைவருமே. அந்த அளவிற்கு சினிமாவில் தனது கவிதைகளால் பல பாடல்களை ஹிட் பெற செய்தவர் கண்ணதாசன்.

ஆனால் அடுத்த தலைமுறை சினிமா உருவாக உருவாக கவிதைக்கான மதிப்பு தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் பாடலுக்கு வரிகள் எழுதலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது.

கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு 9 மகன்கள் இருந்தனர். அவர்கள் பற்றி தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் அவரது மகன் கோபி வெகுநாட்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஏற்கனவே ஒரு படம் நடித்திருந்த நிலையில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அவரை சந்தித்தார் இயக்குனர் பாலா. இவர் பார்ப்பதற்கு வட இந்திய ஆள் போல தெரிந்ததால் அவரை பார்த்தவுடன் உங்களுக்கு தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார் பாலா. உடனே அவர் சார் நான் கண்ணதாசனோட மகன் சார் என கூறியுள்ளார்.

அதனை கேட்டு ஆச்சரியப்பட்டு போயுள்ளார் பாலா. இந்த நிகழ்வை கோபி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.