Cinema History
கோபத்தில் விரக்தியில் எழுதின ஒரு கதை!.. என் வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு!.. பேரரசுக்கு நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமா இயக்குனர்களில் குறைந்த காலமே இருந்தாலும் அவரது திரைப்படங்களுக்கு தனி பேரும் புகழும் உருவாக்கியவர் இயக்குனர் பேரரசு. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கனவோடு வந்த பல இயக்குனர்களில் பேரரசும் முக்கியமானவர்.
ஆரம்ப காலக்கட்டங்களில் எடுத்து உடனேயே இயக்குனராக வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த பேரரசு, முதலில் சினிமாவில் மற்ற துறைகளில் பணிப்புரிந்து வந்தார். 15 வருட சினிமா அனுபவத்திற்கு பிறகு சினிமாவில் இயக்குனராக வாய்ப்பு தேட துவங்கினார்.
முதலில் அவர் எழுதிய கதைகள் அனைத்துமே இயக்குனர் சேரனின் திரைப்படங்கள் மாதிரி குடும்ப பாணியிலான திரைப்படங்களாக இருந்தன. இதனால் அவரை சந்தித்த தயாரிப்பாளர்கள் அனைவருமே கமர்ஷியலான ஒரு கதை இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் என கூறிவிட்டனர்.
இதனால் கடுப்பான பேரரசு விரக்தியில் ஒரு கமர்ஷியல் கதையை எழுதி வைத்தார். அதனை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் கதை கேட்பதற்காக பேரரசை அழைத்திருந்தது, வந்த பேரரசிடம் எங்களிடம் விஜய்யை வைத்து படமெடுக்க கால் ஷீட் உள்ளது. அவருக்கு தகுந்தாற்போல உங்களிடம் கதை உள்ளதா எனக் கேட்டுள்ளனர்.
பேரரசும் தான் எழுதிய கமர்ஷியல் கதையை கூறியுள்ளார். அது தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகவும் பிடித்தது. அன்று மாலையே விஜய்யும் அந்த கதையை கேட்டுவிட்டு நன்றாக உள்ளது என கூறிவிட்டார். இதனையடுத்து திருப்பாச்சி திரைப்படம் தயாரானது.
இறுதியாக பல வருடங்களாக பேரரசு எழுதி வைத்த திரைப்படம் கை கொடுக்கவில்லை. விரக்தியில் எழுதிய ஒரு கதை அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்