Connect with us

லேடீஸ் விஷயத்தில் இயக்குனர் பார்த்த வேலை.. அஜித் நடித்த காட்சியில் செய்த சம்பவம்..!

ajith

Cinema History

லேடீஸ் விஷயத்தில் இயக்குனர் பார்த்த வேலை.. அஜித் நடித்த காட்சியில் செய்த சம்பவம்..!

Social Media Bar

தமிழில் அதிக வசூல் திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவர். அதேபோல தமிழில் அதிகமான ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரமாகவும் அஜித் இருந்து வருகிறார்.

பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும். விஜய்யை விட அஜித் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று கூறலாம்.

தமிழில் வரவேற்பு:

அவர் நடித்த பில்லா, அசல் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக இருந்து வந்தன. இதனால் அப்போது முதலே நடிகர் அஜித்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் என்பவர்கள் குறைவாகவே இருந்தனர்.

ajith
ajith

இளைஞர்கள் மத்தியில்தான் அஜித் மிகவும் பிரபலமாக இருந்தார். இந்த நிலையில்தான் இயக்குனர் பேரரசு அஜித்தை கதாநாயகனாக வைத்து திருப்பதி என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது பேரரசு ஒரு முடிவு செய்தார்.

பேரரசு வைத்த காட்சி:

அதாவது இந்த திரைப்படம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடித்த படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே அதற்கு தகுந்தார் போல நிறைய காட்சிகளை திருப்பதி திரைப்படத்தில் வைத்தார். லேடீஸ் செண்டிமெண்டில் கவர் செய்வதற்காக அந்த படத்தில் பிரசவத்திற்கு இலவசம் என்கிற விஷயத்தை அஜித்தின் மூலமாக பேரரசு வைத்தார்.

அது பெரிதான வரவேற்பை அப்பொழுது பெற்றது என்று கூறுகிறார் பேரரசு அதற்கு பிறகு எங்கு பார்த்தாலும் பிரசவத்திற்கு இலவசம் என்கிற விஷயத்தை பார்க்க முடிகிறது. அதேபோல சிவகாசி மாதிரியான மற்ற திரைப்படங்கள் எல்லாம் ஆக்சன் திரைப்படங்களாக எடுத்திருப்பேன் ஆனால் திருப்பதி திரைப்படத்தை சமூக பொறுப்புடன் இயக்கினேன் என்று கூறுகிறார் பேரரசு.

To Top