Cinema History
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரா இவரு!.. அஜித் செய்கையால் ஆடி போன ராஜமௌலி!..
Rajamouli and Ajithkumar : தெலுங்கு திரை உலகின் பெரும் சக்கரவர்த்தி என்று ராஜமௌலியை கூறலாம். தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சியான காட்சிகளும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்று இருந்த தமிழ் மக்களின் மனதில் தெலுங்கு சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் உண்டு என்கிற விதையை போட்டவர் ராஜமௌலி.
ராஜமௌலி திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கிய பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு வரத் துவங்கியது. இப்போதும் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ராஜமௌலி இயக்கி இருக்கலாம் என கூறும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கதான் செய்கிறது.
அப்படிப்பட்ட ராஜமௌலியே தமிழ் நடிகர் அஜித்தை பார்த்து வியந்து போன சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு முறை ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சாப்பிடலாம் என்று சென்றிருக்கிறார் ராஜமௌலி. அப்பொழுது அவர் பார்க்கும் தூரத்தில் இன்னொரு மேஜையில் அஜித் அமர்ந்திருக்கிறார்.

அஜித்திற்கு ராஜமௌலியை பார்த்தவுடனேயே அவருக்கு தெரிந்து விட்டது இவர் பாகுபலி பட இயக்குனர்தான் என்று, உடனே அங்கு சென்று ராஜமௌலிக்கு கை கொடுத்து சார் நான்தான் அஜித் தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கிறேன் என்று அறிமுகம் கொடுத்து இருக்கிறார்.
ராஜமௌலிக்கு ஏற்கனவே அஜித்தை தெரியும் என்றாலும் அவர் பேசுவாரா என்கிற சந்தேகத்தில் அவர் அஜித்தை பார்த்தும் பார்க்காதது போல இருந்தார் இருந்தும் அஜித்தே வந்து பேசவும் அவருக்கு கை கொடுத்து பேசியிருக்கிறார் ராஜமௌலி.
பிறகு குடும்பத்துடன் ராஜமௌலி வந்து இருக்கிறார் என்பதை அறிந்து மீண்டும் போய் தனது மேஜையில் அமர்ந்து கொண்டார் அஜித். அதன் பிறகு ராஜமௌலியின் மனைவி வந்தவுடன் அங்கிருந்து சைகை மூலம் உங்களது மனைவியா என்று கேட்டிருக்கிறார் அஜித்.

ஆமாம் என்று ராஜமௌலி கூறவும் திரும்பவும் எழுந்து வந்து அவருக்கும் கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்திருக்கிறார் அஜித். இதை பேட்டியில் கூறிய ராஜமௌலி தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு மனிதர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன் என்று இந்த நிகழ்வு குறித்து கூறி இருக்கிறார்.
