பத்திரிக்கை காரன்னா உன் இஷ்டத்துக்கு எழுதுவியா!.. பட விமர்சனத்தால் பத்திரிக்கையாளர் மீது வழக்கு போட்ட எம்.ஜி.ஆர் பட இயக்குனர்!..

சினிமாவில் வெகு அரிதாகவே தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் இருப்பார்கள். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கொடுத்த இயக்குனர்கள் வெகு சிலரே.

எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் அவருக்கு தோல்வி படம் என்ற ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த வகையில் அப்போது கொடிகட்டி பறந்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர்.

director-sridhar
director-sridhar
Social Media Bar

இயக்குனர் ஸ்ரீதர் கூட நிறைய தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். அப்படியாக அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒரு திரைப்படம் அவளுக்கென்று ஒரு மனம். இந்த திரைப்படத்தை தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கினார் இயக்குனர் ஸ்ரீதர்.

தோல்வியை கண்ட படம்:

தமிழில் இந்த திரைப்படம் ஓரளவுதான் வெற்றியை கொடுத்தது. ஆனால் ஹிந்தியை பொறுத்தவரை இந்த திரைப்படம் மொத்தமாகவே தோல்வியை கண்டது. இந்த நிலையில் அப்பொழுது திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள் பத்திரிகைகளில்தான் வெளிவரும் அப்படியாக இந்த திரைப்படத்தை பற்றி ஒரு ஹிந்தி பத்திரிகையில் செய்தி வெளிவரும் பொழுது ஸ்ரீதரை மிகவும் மோசமாக விமர்சித்து அந்த பத்திரிகையாளர் எழுதியிருந்தார்.

மேலும் ஸ்ரீதருக்கு திரைப்படமே எடுக்க தெரியவில்லை என்றும் இதோடு அவர் சினிமாவை விட்டு சென்று விடுவது நல்லது என்றும் அவர் எழுதியிருந்தார். இதனால் கோபமான ஸ்ரீதர் அந்த பத்திரிக்கை நிறுவனத்தின் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

Avalukendru_Or_Manam
Avalukendru_Or_Manam

இந்த நிலையில் அதே பத்திரிகையில் பிரபல எழுத்தாளரான குஷ்வந்த் சிங் ஆசிரியராக பணிபுரிந்து வந்து கொண்டிருந்தார். இந்த விவரங்களை அறிந்த அவர் ஸ்ரீதரை நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் மேல் ஸ்ரீதர் அதிக மரியாதை கொண்டிருந்ததால் அந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார் ஸ்ரீதர்.

அப்பொழுது அந்த வழக்கை தொடர்ந்திருந்தால் அதன் மூலமாக கண்டிப்பாக ஒரு 20 லட்ச ரூபாயை ஸ்ரீதர் வாங்கி இருக்க முடியும் என்றாலும் கூட குஷ்வந்த் சிங் மீது இருந்த மரியாதையின் காரணமாக அந்த வழக்கை அவர் திரும்ப பெற்றார்.