Connect with us

இதுதான் என் படத்துக்கு சாபக்கேடா இருக்கு!.. அதை மட்டும் பண்ணாதீங்க ப்ளீஸ்!.. ரசிகர்களுக்கு சுந்தர் சியின் வேண்டுக்கோள்!..

sundar c aranmanai 4 poster

News

இதுதான் என் படத்துக்கு சாபக்கேடா இருக்கு!.. அதை மட்டும் பண்ணாதீங்க ப்ளீஸ்!.. ரசிகர்களுக்கு சுந்தர் சியின் வேண்டுக்கோள்!..

Social Media Bar

தமிழில் வெகு காலங்களாக நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனராக சுந்தர் சி இருந்து வருகிறார். எப்போதுமே சுந்தர் சியின் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படமே பயங்கர காமெடியான திரைப்படமாகதான் இருந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் முக்கியமான இயக்குனராக சுந்தர் சி இருந்தார். அதே சமயம் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான மாறுப்பட்ட திரைப்படங்களையும் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

aranmanai 4
aranmanai 4

ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் சுந்தர் சி படங்களுக்கு அந்த அளவிற்கு வரவேற்பு இல்லை என்றே கூற வேண்டும். இதற்கு முன்பு அவர் இயக்கி வந்த அரண்மனை திரைப்படத்தின் பாகங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன. அதனை தொடர்ந்து தற்சமயம் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி.

இதுக்குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி கூறும்போது அரண்மனை 4 படத்தை பார்க்க செல்லும் முன்பு தயவு செய்து இணையத்தில் வரும் ரிவீவ்களை பார்த்துவிட்டு செல்லாதீர்கள். நீங்களே படத்தை பார்த்து அது நன்றாக உள்ளதா என முடிவு செய்யுங்கள்.

ஏனெனில் இந்த பட விமர்சனங்கள்தான் எனக்கு எப்போதுமே சாபக்கேடாக அமைந்துள்ளது என கூறுகிறார் இயக்குனர் சுந்தர் சி.

To Top