Connect with us

யோசிச்சு முடிவெடு!.. நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் இதோட போய்டும்!.. உதவி இயக்குனருக்கு சுந்தர் சி கொடுத்த நெருக்கடி!.

sundar c

Cinema History

யோசிச்சு முடிவெடு!.. நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் இதோட போய்டும்!.. உதவி இயக்குனருக்கு சுந்தர் சி கொடுத்த நெருக்கடி!.

Social Media Bar

1995 ஆம் ஆண்டு முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமே காமெடி திரைப்படமாகதான் அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வர துவங்கின.

மேட்டுக்குடி, அருணாச்சலம், உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சுந்தர் சி. சுந்தர் சியின் ஆரம்பக்கட்டம் முதலே அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் இயக்குனர் சுராஜ். சுராஜிற்கு தனியாக படமெடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் சுந்தர் சியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அவரிடமே பணிப்புரிந்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் சுந்தர் சிக்கு சுராஜ் திரைப்படம் இயக்க நினைக்கிறார் என்பது தெரிந்ததுமே தானே அந்த திரைப்படத்தை தயாரிப்பதாக கூறினார் சுந்தர் சி. சரி என்று சுராஜ் கதையை எழுதினார். ஆனால் அதில் நடிப்பதற்கு அப்போது நடிகர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதில் சுந்தர் சியே நடிப்பது என முடிவானது.

sundar C
sundar C

தலைநகரம் என்கிற அந்த திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கியப்பிறகும் கூட தினசரி படத்தின் கதையை கேட்டுள்ளார் சுந்தர் சி. இந்த நிலையில் ஒரு நாள் சுராஜை அழைத்த சுந்தர் சி. இந்த திரைப்படம் உன் முதல் படம் ஒருவேளை இந்த படம் தோல்வியை கண்டால் அதோடு உன் சினிமா வாழ்க்கை போய்விடும்.

அதே போல இந்த படத்தின் தோல்வி எனக்கும் சினிமா வாழ்க்கையை காலி செய்துவிடும். என கூறியுள்ளார். ஆனால் தலைநகரம் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்ற படமாகவே இருந்தது.

To Top