Connect with us

எங்களுக்காக பருத்தி பால் வித்து கொடுத்தார் விக்னேஷ் சிவன்!.. எதிர்பாராமல் செய்த உதவி!.

vignesh shivan

News

எங்களுக்காக பருத்தி பால் வித்து கொடுத்தார் விக்னேஷ் சிவன்!.. எதிர்பாராமல் செய்த உதவி!.

Social Media Bar

தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். வெளிவந்த காலக்கட்டத்தில் போடா போடி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் போக போக அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கும் வாய்ப்புகள் வர துவங்கின. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம்தான் நானும் ரவுடிதான் இந்த திரைப்பட படப்பிடிப்பு நடந்தப்போதுதான் இவருக்கும் நயன் தாராவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

தற்சமயம் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு அவருக்கு தெரியாமலே உதவியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உணவு பொருட்களை விற்க கூடியவர்கள். அவர் விக்னேஷ் சிவனை நேரில் சந்தித்தப்போது அவர்களின் தயாரிப்பான பருத்தி பாலை கொடுத்துள்ளனர்.

அப்போது அதை வாங்கி சென்ற விக்னேஷ் சிவன் சில மாதங்கள் கழித்து இந்த பருத்திபால் எங்கு கிடைத்தது என தெரியவில்லை ஆனால் சூப்பரா இருக்கு. முடிந்தால் பருகி பாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். பிறகு அந்த ஸ்டார்ட் நிறுவனத்தில் பங்கு தாரராகவும் சேர்ந்திருக்கிறார்.

To Top