Latest News
மதசார்பு கட்சியிலலாம் இணைய முடியாது! தேர்தல் அழைப்பு விடுத்த கட்சிக்கு சத்தியராஜ் மகள் கொடுத்த அதிரடி பதில்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் கடவுள் மறுப்பாளராகவும் திகழும் சத்யராஜின் மகள் திவ்யா, பிரபல அரசியல் கட்சி ஒன்றை அவமதிப்பது போல் பேசியது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்து வரும் பிரபல நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும் மகிழ்மதி என்ற இயக்கம் மூலமாக பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். தந்தையை போலவே சமத்துவத்தை முன்வைத்து அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் திவ்யாவிற்கு, அரசியலில் குதித்து சேவை செய்ய வேண்டும் எண்ணமும் உள்ளது. ஏற்கனவே சனதானம் குறித்து கடந்தாண்டு இவர் பேசிய பேச்சுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட திவ்யாவிற்கு பிரபல கட்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த செய்தி குறித்து திவ்யாவிடம் கேட்க, அதற்கு அதிரடியான ஒரு பதிலை அளித்துள்ளார் திவ்யா.
எனக்கு அரசியலில் ஆர்வமுண்டு. நான் பதிவிக்காக அரசியல் வர வேண்டும் என நினைக்கவில்லை. மக்கள் பனி செய்வதற்காகவே அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.ஏற்கனவே களப்பணி செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.
மேலும், எம்பி ஆவதற்கு அரசியலுக்கு வருகிறீர்களா? மந்திரி பதிவி மேல் விருப்பம் இருக்கா? உங்கள் தந்தை சத்யராஜ் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா என்னும் கேள்விகளை பலர் தன்னிடம் கேட்பதாக கூறிய அவர், வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான் எனவும் ஆனால், எந்தவொரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பமில்லை எனவும் பளிச்சென்று பதிலளித்துவிட்டார்.
தனிக்கட்சி துவங்க போவதில்லை எனவும் தேர்தல் முடிந்தவுடன் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை அறிவிப்பதாகவும் திவ்யா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்