சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு சென்ற டி.ஆர் மகாலிங்கம்? – வாழ்க்கையையே மாற்றிய ஒரு படம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் டி.ஆர் மகாலிங்கம். 1938 இல் நந்தகுமார் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

அதற்கு பிறகு வேதாள உலகம், நாம் இருவர் என பல படங்களில் நடித்தார். ஆனால் வரிசையாக படங்கள் தோல்வி அடையவே அவரை எந்த படத்திற்குமே அழைக்காமல் இருந்தனர். இதனால் வறுமையில் வாடினார் டி.ஆர் மகாலிங்கம்.

வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு அதற்கு வாடகை தரக்கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் கவிஞர் கண்ணதாசன், ஜி.ஆர் நாதன் இன்னும் இரண்டு பேர் என நான்கு பேர் கூட்டணியில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினர்.

ஆளுக்கு 10,000 ரூபாய் போட்டு படம் எடுக்க தீர்மானிக்கப்பட்டது. மொத்தமே 40,000 ரூபாய்தான் உள்ளது என்பதால் குறைந்த சம்பளத்தில் கதாநாயகனை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவானது. இறுதியாக டி.ஆர் மகாலிங்கத்தை தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் மக்கள் மனதில் பதிவான முகம். அதே சமயம் வறுமையில் இருப்பதால் கண்டிப்பாக குறைந்த சம்பளம் என்றாலும் இந்த வாய்ப்பை தவறவிட மாட்டார்.

அதே போல டி.ஆர் மகாலிங்கத்தோடு ஒப்பந்தமாகி மாலையிட்ட மங்கை என்கிற படம் உருவானது. இதற்காக அட்வான்ஸ் தொகையாக 1000 ரூபாய் டி.ஆர் மகாலிங்கத்திற்கு தரப்பட்டது. நீங்க எனக்கு மறுவாழ்க்கை கொடுத்து இருக்கீங்க என கண்ணதாசனிடம் டி.ஆர் மகாலிங்கம் இதற்காக ஆனந்த கண்ணீர் விட்டதாக கூறப்படுகிறது.

படத்தை எடுத்து முடித்தவுடன் இந்த படத்தை ஏ.எல்.எஸ்ஸிடம் ரெண்டரை லட்சத்துக்கு விற்றுவிட்டனர். குறைந்த தொகை என்பதால் அவரும் கூட படத்தை வாங்கி கொண்டார். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது மாலையிட்ட மங்கை திரைப்படம். தமிழில் மிக பிரபலமான செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இந்த படத்தில் வரும் பாடலே. சொல்ல போனால் அதுவே டி.ஆர் மகாலிங்கத்தின் வாழ்க்கையை தூக்கிவிட்ட திரைப்படம் என கூறலாம்.

அதற்கு பிறகு வரிசையாக பட வாய்ப்பை பெற்ற டி.ஆர் மகாலிங்கம் அதன் பிறகு சொந்த வீடு வாங்கி செட்டில் ஆனார்.

Refresh