News
Doctor Strange படத்திற்கு தடை! – அதிர்ச்சியில் மார்வெல் ரசிகர்கள்!
பிரபலமான மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் சமீப காலமாக ரொம்ப ஃபேமஸாக இருப்பவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்.

மந்திரவாதி டாக்டரான இவர் செய்யும் சாகசங்கள் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் படங்களிலும் இடம்பெற்ற நிலையில் இவர் மீது ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு இருந்து வருகிறது.
முன்னதாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஒரு படம் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் தற்போது மல்டிவெர்ஸை கான்செப்டாக கொண்ட Doctor Strange and the Multiverse of Madness திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் Bennedict Cumberbatch டாக்டராக நடித்துள்ள நிலையில் ஸ்பைடர்மேன் படங்களை இயக்கிய சாம் ரெய்மி படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீப காலமாக் வைரலாகியுள்ள நிலையில் மே 6ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
இடியின் கடவுள் திரும்ப வந்துட்டார்… ஆனா வேற மாறி..? – Thor love and Thunder டீசர்!
இந்நிலையில் இந்த படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த படத்தில் தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், அது சவுதி சட்டங்களுக்கு புறம்பானது என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
