Tamil Cinema News
விடாமுயற்சியை டிராகனோட ஒப்பிடுறதே பைத்தியக்காரத்தனம்.. கடுப்பான தயாரிப்பாளர்.!
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் கொடுக்காத வெற்றியை சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் கொடுத்தது.
இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் விரும்பும் கதைகளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் முக்கியமே கிடையாது என்பது இதன் மூலம் தெரிந்து இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து நிறைய பேச்சுக்கள் இருந்து வந்தன. முக்கியமாக விடாமுயற்சி வெளியாக இருந்த அதே தினத்தில்தான் டிராகன் திரைப்படமும் வெளியாக இருந்தது. ஆனால் அஜித் படம் வெளியாகிறது என்பதால் பிரதீப் டிராகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி வைத்தார்.
ஒருவேளை இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியிருந்தால் விடாமுயற்சி இந்த வசூலை கூட பெற்று இருக்காது என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்நிலையில் இதற்கு ஃபேட்மேன் ரவிந்தர் பதிலளித்திருக்கிறார்.
அவர் கூறும் பொழுது விடாமுயற்சியையும் டிராகனையும் ஒப்பிட்டு பேசுவதே முதலில் சரி கிடையாது. பிரதீப் ரங்கநாதனே அஜித் மீது கொண்ட மரியாதையின் காரணமாக வெளியீட்டு தேதி மாற்றி வைத்திருக்கிறார்.
அதனை தாண்டி டிராகன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரத்தை விட 10 மடங்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம்தான் விடாமுயற்சியில் அஜித்தின் கதாபாத்திரமும்,
அப்படி ஒரு கதாபாத்திரத்தை பிரதிப் ரங்கநாதனால் நடிக்க முடியாது எனவே இது இரண்டையும் ஒப்பிட்டு பேசுவதே பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார் ஃபேட்மேன் ரவீந்தர்.
