Connect with us

எனக்கு மார்க்கெட் இல்ல! என்னப்பா பண்றது.. விஜயகாந்த் படத்தில் நொந்து போன சிவக்குமார்…

Cinema History

எனக்கு மார்க்கெட் இல்ல! என்னப்பா பண்றது.. விஜயகாந்த் படத்தில் நொந்து போன சிவக்குமார்…

Social Media Bar

கமல் ரஜினி போன்ற பெரும் நடிகர்கள் சினிமாவில் பெரிய ஆட்களாக வருவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சிவக்குமார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும் நட்சத்திரமாக சிவகுமார் இருந்தார். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஒரு பிரபலமும் நிரந்தரமாக அவர்களது இடத்தை தக்க வைத்துக்கொள்வது என்பது கடினமான ஒன்று.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற சில நடிகர்கள் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். அதிலும் சிவாஜி கணேசனும் கூட தன்னுடைய கடைசி காலகட்டங்களில் துணைக் கதாபாத்திரங்களில்தான் நடத்தி வந்தார்.

சிவக்குமார் குறைந்த காலக்கட்டமே பிரபலமாக இருந்ததால் அதன் பிறகு அதிகமாக துணை கதாபாத்திரங்களிலே நடிக்க தொடங்கினார். கண்ணுபட போகுதய்யா திரைப்படம் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அதற்காக பொள்ளாச்சிக்கு படப்பிடிப்பிற்கு சிவக்குமார் வந்தார்.

அப்பொழுது சிவக்குமாரின் ரசிகர்கள் பலரும் அவரை பார்க்க வந்திருந்தனர், கண்ணுபட போகுதய்யா திரைப்படத்தில் விஜயகாந்திற்கு அப்பா கதாபாத்திரமாக சிவக்குமார் நடித்தார். எனவே வயதானவர் போன்ற தோற்றத்தில் மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தார் சிவக்குமார்.

அதை பார்த்ததும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது ஏன் சார் இவ்வளவு வயதானவராக மேக்கப் போட்டுக் கொண்டு வருகிறீர்கள் என கேட்டுள்ளனர் ரசிகர்கள். இல்லை நான் விஜயகாந்திற்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார் சிவகுமார். இதைக் கேட்டதும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

ஏனெனில் விஜயகாந்த்தை விட சிவக்குமாருக்கு வயது குறைவு ஏன் சார் வயது இவ்வளவு குறைவாக உள்ள நீங்கள் அப்பாவாக நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர் ரசிகர்கள். இது குறித்து ஒரு பேட்டியில் சிவகுமார் பேசும்போது மார்க்கெட் இல்லாததால்தான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்  என்று எப்படி சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

பெரும் மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்கள் பிறகு மார்க்கெட்டை இழந்து இப்படித் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அது அவர்களுக்கு மிகப்பெரும் வலியை கொடுக்கும் என அந்த பேட்டியில் கூறியுள்ளார் சிவக்குமார்.

To Top