Cinema History
பருத்தி வீரனோட காபிதான் இந்த படங்கள் எல்லாம்?.. லிஸ்ட் போடும் இயக்குனர் அமீர்!.
Director Ameer : தமிழில் ட்ரெண்ட் செட் படங்கள் என்று சில படங்கள் இருக்கும் அதாவது அந்த திரைப்படங்கள் வெளியான பிறகு அது கொடுத்த வெற்றியை பார்த்து தொடர்ந்து அதே போலவே திரைப்படங்கள் வரத் துவங்கும்.
உதாரணமாக முனி திரைப்படத்தை கூறலாம். முனி திரைப்படம் வந்து பெரும் வெற்றியை கொடுத்த பிறகு பேய் படங்கள் அதிகமாக எடுக்கப்பட துவங்கின. அதேபோல சூது கவ்வும் திரைப்படம் வெளியான பிறகு ஆன்ட்டி ஹீரோ கதையை வைத்து நிறைய திரைப்படங்கள் வந்தன.
அப்படி தமிழ் சினிமாவில் டிரெண்டை மாற்றிய ஒரு திரைப்படம்தான் பருத்திவீரன். பருத்திவீரன் குறித்து அமீர் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார் அதில் அவர் கூறும்பொழுது பருத்திவீரன் திரைப்படத்தை எடுத்த பொழுது முதன் முதலாக கிராமத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள் என்பதை கொஞ்சம் வெளிப்படையாக காட்டி இருந்தேன்.
விரக்தியடைந்த அமீர்:
பிறகு அதே கதைகளை கொண்டு எக்கச்சக்கமான திரைப்படங்கள் வர துவங்கின. எல்லா படங்களிலும் கதாநாயகர்கள் அழுக்கு கைலியை கட்டிக்கொண்டு தாடியை வளர்த்துக் கொண்டு சுற்ற துவங்கினார்கள். ஒரு அளவுக்கு மேல் எனக்கே எதற்காக பருத்திவீரன் படத்தை எடுத்தோம்.
பேசாமல் அதை எடுக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது அந்த அளவிற்கு வெறுப்படையை செய்துவிட்டனர். இவ்வளவு ஏன் தெலுங்கில் வெளிவந்த புஷ்பா கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா போன்ற திரைப்படங்களின் அடிப்படையே பருத்திவீரன் திரைப்படம் தான்.
ஆனால் அவையெல்லாம் வெற்றி கொடுக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது ஆனால் அதே கதைகளத்தை கொண்டு மோசமான திரைப்படங்களை எடுக்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமீர்.
இதற்கு பதில் அளிக்கும் நெட்டிசன்கள் புஷ்பாவை கூட ஒரு வகையில் பருத்திவீரன் திரைப்படத்தோடு கொள்ளலாம். ஆனால் காந்தாரா திரைப்படத்திற்கும் பருத்தி வீரன் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாதே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்