News
இப்ப உள்ள நடிகைகள் இதை போய் விரும்பி சாப்பிடுறாங்க..அட கொடுமையே..
ஒரு படம் உருவாவதற்கு கதை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அந்த படத்தில் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களின் பங்களிப்பும் முக்கியம். ஆனால் நமக்கு அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர், பாடகர் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இதுபோன்ற நபர்கள் மட்டும் தான் தெரிவார்கள்.
ஆனால் படத்திற்கு பின்பு அந்த படம் உருவாவதற்கு பல தொழிலாளர்கள், கலைஞர்கள் தங்களுடைய கடின உழைப்பை கொடுத்திருப்பார்கள். மேலும் சண்டைக் காட்சிகளில் எல்லாம் டூப் வைத்து நடிகர்கள் நடித்திருப்பார்கள்.
இந்நிலையில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால் அங்கு நடிகர், நடிகைகளுக்கு அனைத்துமே படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்படும்.
அந்த வகையில் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளுக்கு சாப்பாடு கொடுக்கப்படும். இந்நிலையில் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் எந்த மாதிரியான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை பற்றி சினிமா சமையல்காரர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா நடிகைகளின் உணவு
நம்மில் பலருக்கும் கேப்டன் விஜயகாந்த் பற்றி அறிந்திருப்போம். அவர் தான் என்ன உணவு சாப்பிடுகிறேனோ அந்த உணவுதான் அனைத்து தொழிலாளர்களும் சாப்பிட வேண்டும் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவை வழங்கியவர் நடிகர் விஜயகாந்த்.
இந்நிலையில் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் தங்களுக்கு பிடித்த உணவை வீட்டில் இருந்து தயார் செய்து கொண்டுவருவார்கள். ஒரு சிலர் புரொடக்ஷனில் கொடுக்கும் உணவை சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் சில நடிகை, நடிகர்கள் தங்களுக்கு என்ன உணவு வேண்டும் என்பதை புரொடக்ஷனில் உள்ள சமையல்காரர்களிடம் கேட்டு சாப்பிடுவார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் அவர்களின் உணவு டயட் பற்றி பிரபல சேனல்களில் பேசி இருப்பார்கள். தாங்கள் எவ்வாறு உடற்பயிற்சி செய்கிறோம். என்ன மாதிரியான உணவை சாப்பிடுகிறோம் என்பதை பற்றி கூறியிருப்பார்கள். இந்நிலையில் இவர்கள் படப்பிடிப்பின் போது எந்த வகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதை பற்றி தற்பொழுது சினிமா சமையல்காரர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
நடிகைகளின் உணவு
சினிமா சமையல்காரர் ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, நடிகை தமன்னாவிற்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவர் கருப்பு மிளகு கோழி வறுவல் சாப்பிடுவார். மேலும் சிக்கனில் பட்டர் சிக்கன், சிக்கன் டிக்கா போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார் எனவும்.

தற்போது உள்ள நடிகைகள் அவித்த முட்டை, ஆஃப் பாயில், பச்சை பயிறு போன்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது போன்ற உணவுகளை தான் நடிகைகள் சாப்பிடுகிறார்கள். சொல்லபோனால் இப்போது உள்ள நடிகைகள் சாப்பிடுவதே இல்லை என சினிமா சமையல்காரர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
