அஜித்துக்கு எதிராக களம் இறங்கும் பெரிய இயக்குனர் படம்.. எனக்குன்னு வருவீங்களா ப்ரோ..!

சில வருடங்களாகவே தொடர்ந்து நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் திரைக்கு வருவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. வலிமை திரைப்படத்திலிருந்தே அஜித் திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வருகின்றன.

இது அஜித் ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் அதே மாதிரி விடாமுயற்சி திரைப்படம் தொடர்ந்து பல வருடங்களாக வெளியாகும் வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்தும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

ரஜினி நடித்து தற்சமயம் வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படம் துவங்குவதற்கு முன்பே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

விடாமுயற்சி ரிலீஸ்:

விடாமுயற்சியை தொடர்ந்து அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க சென்று விட்டார். இந்த நிலையில் பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் அந்த படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதால் ஏப்ரல் மாதம்தான் அந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

vidamuyarchi
vidamuyarchi
Social Media Bar

எனவே அந்த சமயத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கு நடுவே தற்சமயம் இயக்குனர் ஷங்கர் அவரே இயக்கி வரும் கேம் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவெடுத்து இருக்கிறாராம்.

ஷங்கர் படம்:

கேம் சேஞ்சர் திரைப்படத்தை பொருத்தவரை அது ராம்சரண் நடிக்கும் திரைப்படம் என்பதால் அஜித்துக்கு பெரிய போட்டியாக இருக்காது இருந்தாலுமே கூட வசூல் ரீதியாக இந்த படம் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தும்.

ஏனெனில் எப்படியும் இயக்குனர் ஷங்கர் படம் என்பதால் ஓரளவிற்கு அதிக தியேட்டர் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு கிடைக்கும் இது விடாமுயற்சி படத்தின் வசூலை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.