காலைல ஓ.கே சொன்ன படத்துக்கு ஈவ்னிங்கே நோ சொன்ன ரஜினி.. இன்னமும் வெளியாகாத திரைப்படம்.!
ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட்டுதான். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக இப்படியான ஒரு பெயரை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது கொஞ்சம் கூட குறையவில்லை.
இதனாலேயே நிறைய இயக்குனர்கள் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் எந்த இயக்குனரோடு படம் பண்ண ஆசைப்படுகிறாரோ அந்த இயக்குனர் படத்தில்தான் நடிப்பார் என்கிற நிலை இருக்கிறது.
இப்போதெல்லாம் பெரும்பாலும் புதிய இயக்குனர்கள் திரைப்படத்தில்தால் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்சமயம் கூட அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருமே இளம் இயக்குனராகதான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடன் தன்னுடைய அனுபவம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார். அதில் கௌதம் மேனன் கூறும்போது துருவ நட்சத்திரம் படத்தின் கதையை நான் முதலில் நடிகர் ரஜினிகாந்திடம்தான் கூறினேன். காலையில் அந்த கதையில் நடிக்கிறேன் என கூறியவர் மாலை போன் செய்து வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதே போல தனுஷிடமும் கதையை கூறினேன். ஆனால் நான் க்ளைமேக்ஸை ஒழுங்காக எழுத மாட்டேன் என யாரோ கூறினார்களா என்னவென்று தெரியவில்லை. அவரும் மறுத்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.