தமிழே வரலையே!.. கெளதம் மேனன் சொன்ன கதையால் அதிர்ச்சியடைந்த விஜய்!..
சினிமாவில் திட்டமிடப்பட்டு படமாக்கப்படும் திரை கதைகள் கொஞ்சம்தான். ஆனால் எழுதப்பட்டு எடுக்கப்படாமல் போகும் திரைக்கதைகள் எக்கசக்கமாக சினிமாவில் உண்டு. அப்படி பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகாமலே போய் உள்ளன.
இப்படி கௌதம் மேனன் விஜய்க்காக எழுதிய ஒரு கதையும் உண்டு. அந்தத் திரைப்படம் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தை விட சிறப்பாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் என்று கூறப்படுகிறது.
கௌதம் மேனன் பிரபலமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தார். இந்த திரைப்படத்திற்கு யோகன் என்று பெயர் வைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக இந்த படம் எடுக்கப்பட இருந்தது.

ஆங்கிலத்தில் பிரபலமான காமிக்ஸான லார்கோ வின்ச் என்னும் காமிக்ஸின் தழுவுவலாக இந்த படம் எடுக்கப்பட இருந்தது. இந்த படத்தின் கதையும் விஜய்க்கு பிடித்திருந்தது. ஆனால் படத்தின் கதையை கௌதம் மேனன் கூறும் பொழுது முழுக்க முழுக்க அதில் விஜய்க்கு ஆங்கிலத்திலேயே வசனங்கள் இருந்தன.
ஏனெனில் இந்த படம் முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட இருந்ததால் அவ்வாறு வசனங்களை எழுதி இருந்தார் கௌதம் மேனன். ஆனால் இப்படி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கும் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்கிற காரணத்தால் அந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார் விஜய். இருந்தாலும் அது திரைப்படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு மாற்றமாக அது இருந்திருக்கும் என்று இப்போது வரை கருதப்படுகிறது.