அநியாயமான விலை.. குட் பேட் அக்லி முதல் காட்சியில் பிரச்சனை.. என்னப்பா இது?.
வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. நடிகர் அஜித் நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.
மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி திரையரங்குகள் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான புக்கிங் ஓபன் செய்து இருக்கிறது.
இந்த நிலையில் மதுரையில் மட்டும் முதல் காட்சியான ஒன்பது மணி காட்சிக்கான புக்கிங் இப்பொழுது வரை ஓபன் செய்யவில்லை. இதில் என்ன பிரச்சனை என்று பார்க்கும் பொழுது விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதன்படி மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முதல் காட்சியினை 1900க்கும் சாதாரண திரையரங்குகள் 500 ரூபாய்க்கும் விற்க வேண்டும் அப்படி விற்கவில்லை என்றால் முதல் காட்சியை அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று விநியோகஸ்தர்கள் கூறியிருக்கின்றனர்.
12 மணி காட்சியில் இருந்துதான் அவர்கள் படத்தை துவங்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இவ்வளவு டிக்கெட் விலை வைத்து விற்க முடியாது என்கிற காரணத்தினால் மதுரையில் உள்ள திரையரங்குகள் 12 மணி காட்சியையே முதல் கட்சியாக ஓபன் செய்து வைத்திருக்கின்றன.