Tamil Cinema News
புஷ்பா 2வுக்கு இணையான வெற்றியை கொடுக்கணும்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளா..! களத்தில் இறங்கிய குட் பேட் அக்லி.!
அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் திரைப்படம் அமைந்துவிட்டாலே போதும்.
அதில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்கிற நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அடுத்து அஜித் நடித்துவரும் திரைப்படம் குட் பேட் அக்லி.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி என்கிற திரைப்படத்தில் பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் இந்த திரைப்படமும் அவருக்கு நல்ல வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் அதிக வரவேற்பை பெற்றது. எனவே இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படம் எப்படியும் 500 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் புஷ்பா 2 திரைப்படத்தை போல தமிழில் ஒரு முக்கியமான இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
