News
ரொம்ப நாளா படம் எடுக்குறேன்னு இதைதான் செஞ்சீங்களா!.. கோபி சுதாகரின் புது டீசர்!..
Gopi Sudhkar : சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு இளைஞர்களுக்கு யூ டியூப் ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. இதனால் சினிமாவிற்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் பலரும் முதலில் youtube சேனல் ஆரம்பித்து அதில் மக்களிடம் வரவேற்பை பெறுகின்றனர்.
அதற்குப் பிறகு அவர்கள் சினிமாவிற்கு வரும் பொழுது ஆரம்பத்திலேயே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் தங்களுக்கு காமெடி நன்றாக வரும் என்பதால் முதன் முதலாக சின்னத்திரையில் வாய்ப்பு தேடி அலைந்து வந்தவர்கள்தான் கோபியும் சுதாகரும்.
தற்சமயம் பரிதாபங்கள் என்கிற youtube சேனலை நடத்தி வருகின்றனர் இதன் மூலமாக சினிமாவிற்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே ஜோம்பி மாதிரியான திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றனர் ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக பிரபலமாகவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் சொந்தமாக படம் எடுக்க போவதாக கூறி அதற்கு மக்களிடமே காசு கேட்டிருந்தனர். இந்த நிலையில் பலரும் அவர்களுக்கு நிதி உதவி செய்தனர். ஆனால் அதற்குப் பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் கோபியும் சுதாகரும் வெளியிடவில்லை.
இதனால் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று பேச்சுக்கள் வரத் வாங்கின இந்த நிலையில் தற்சமயம் படம் ஒன்றின் டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர் ஏற்கனவே நடிக்க போவதாக கூறிய திரைப்படத்தின் டீசர்தானா இது என்று பலருக்கும் சந்தேகம் எழுந்து வருகிறது. ஆனால் இதை ஏதோ ஒரு குறும்படத்தின் டீசர் என்று தான் கூறப்படுகிறது. எனவே மக்கள் இவர்கள் நடிப்பதற்கு கொடுத்த பணம் போனது போனதுதான் என்கிற நிலையில் தான் இருக்கிறது.
