News
லோகேஷிற்கும் சுருதி ஹாசனுக்கும் இருக்கும் உறவு என்ன!.. படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுதான் காரணமாம்!..
Lokesh kanagaraj : ஒரே ஒரு டீசர் வெளியான காரணத்தினால் கடந்த ஒரு வாரங்களாக லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் அதிக பேசு பொருளாக இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜிற்கு பொதுவாக ரொமான்ஸ் என்றாலே பிடிக்காது என்றுதான் கூற வேண்டும்.
ஒரு முறை பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது கூட படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை வைப்பது பற்றி கூட யோசிக்கவே மாட்டேன். எனது திரைப்படங்கள் எல்லாமே எப்போதும் ஆக்ஷன் திரைப்படங்களாகதான் இருக்கும்.

கதாநாயகி படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு ரொமான்ஸ் காட்சியை வைத்திருப்பேன் என்று கூறுகிறார் லோகேஷ் கனகராஜ். அதேபோல அவரது திரைப்படங்களில் அதிகபட்சம் காதல் ஜோடிகளை பிரித்து விட்டு விடுவார் லோகேஷ் கனகராஜ்.
சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ்:
இப்படி இருக்கும் பொழுது திடீரென்று ஒரு காதல் பாடலில் அவர் நடித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் இனிமேல் என்கிற ஆல்பம் பாடல் வெளியாக இருக்கிறது.
அதற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் சுருதிஹாசனும் லோகேஷும் நெருக்கமாக நடித்திருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் உருவாகி இருக்கிறது என்றெல்லாம் பேச்சுக்கள் வர துவங்கின.

அந்த படப்பிடிப்புகளில் பணிபுரிந்தவர்கள் கூறும் பொழுது உண்மையில் லோகேஷ் கனகராஜும் சுருதிஹாசனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள் அவ்வளவுதான். அந்த பாடல் காட்சிகளில் மிக நெருக்கமாக நடிக்கும் போதும் கூட அதை எந்த அளவிற்கு சரியாக நடிக்க வேண்டும் என்று முன்பே பேசி வைத்துக்கொண்டு அதன்படியே நடித்தார்கள்.
எப்போது கட் சொல்வார்கள் என்று அவர்கள் இருவரும் காத்துக் கொண்டிருப்பார்கள். கட் சொன்ன உடனே இருவரும் விலகி விடுவார்கள் அந்த அளவிற்கு நாகரிகமாகத்தான் அந்த பாடல் முழுவதும் நடித்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகின்றனர்.
அப்படி என்றால் எதற்கு இருவரும் சேர்ந்து கிரிக்கெட்டிற்கு செல்வது போன்ற விஷயங்களை செய்கின்றனர் என கேட்கும் பொழுது அது அந்த பாடலின் பப்ளிசிட்டிக்காக செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
