News
தன் மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா ஜிவி பிரகாஷ்!.. இதுதான் காரணமாம்!.
தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன்தான் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலமாக தனது 17 ஆவது வயதிலேயே திரைத்துறைக்கு அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் ஜிவி பிரகாஷ். இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கின. தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் பிறகு திரைப்படங்களில் நடிக்கவும் தொடர்ங்கினார்.

2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் சைந்தவி என்கிற பெண்ணை திருமணம் செய்து வந்தார். வெகு நாட்களாகவே அவரை காதலித்து வந்த ஜிவி பிரகாஷ் ஒரு வழியாக அவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் 10 வருடங்கள் ஆன நிலையில் இவர்கள் இருவருக்கும் அன்வி என்கிற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள போவதாக செய்திகள் வலம் வந்துக்கொண்டுள்ளன. ஏனெனில் வருடா வருடம் சைந்தவி அவரது திருமண நாளின்போது சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான பதிவு ஒன்றை போடுவாராம்.
ஆனால் தற்சமயம் திருமண நாளை முன்னிட்டு ஒரு ஸ்டோரி கூட போடவில்லை சைந்தவி. இதற்கு நடுவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு செய்தியும் வலம் வந்துக்கொண்டுள்ளது. எனவே விரைவில் இவர்கள் விவாகரத்து வாங்க போகின்றனர் என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.
