Connect with us

ஆரம்பத்துலையே ஆடுனா இதுதான் கதி.. இயக்குனரை குத்தி காட்டி பேசிய ஹரிஸ் கல்யாண்..!

harish kalyan

Tamil Cinema News

ஆரம்பத்துலையே ஆடுனா இதுதான் கதி.. இயக்குனரை குத்தி காட்டி பேசிய ஹரிஸ் கல்யாண்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். பெரும்பாலும் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று  வருகிறார் ஹரிஷ் கல்யாண்.

இந்த நிலையில் ஹரிஸ் கல்யாண் ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை இழந்த விஷயத்தை தற்சமயம் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் நடித்து இயக்குனர் இலன் இயக்கி வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம்.

வாய்ப்பை இழந்த ஹரிஷ்

இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து அறிமுக இயக்குனராக இருந்த அவருக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகனாக ஹரிஸ் கல்யாண்தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் பிறகு அந்த திரைப்படத்தில் நடிகர் கவினை கதாநாயகனாக நடிக்க வைத்தனர் ஆனால் இந்த செய்தியை ஹரிஷ் கல்யாணிடம் கூறவே இல்லை இதனால் ஸ்டார் திரைப்படம் வெளியாகி தோல்வியை கண்ட பொழுது அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக ஆரம்பத்திலேயே ஆடக்கூடாது என குறிப்பிடும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் ஹரிஷ் கல்யாண்.

அதற்குப் பிறகு சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஹரிஷ் கூறும் பொழுது ஸ்டார் பாடத்தில் கவின் இருக்கும் போஸ்டர் வெளி வரும் வரையில் அந்த படத்தில் என்னை நீக்கிய விஷயம் எனக்கு தெரியாது. அதற்கு என்ன காரணம் என்று நான் பேசினால் அது இப்பொழுது சர்ச்சையாகிவிடும் என்றும் கூறியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top