Latest News
எங்க பகவானை அசிங்கப்படுத்திய நயன்தாராவை விட மாட்டோம்… வழக்கு பதிவு செய்த இந்து அமைப்பினர்!..
Nayanthara in Annapoorani : தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. நயன் தாராவை விடவும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான அன்னப்பூரணி திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது அனைவரும் அறிந்த விஷயமே. 12 கோடி தயாரிப்பு செலவில் உருவான இந்த திரைப்படம் வெறும் 80 லட்ச ரூபாய்தான் வசூல் செய்தது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா (யசோதா), சாய் பல்லவி (கார்கி) திரைப்படங்களே இதை விட அதிக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் குறித்து தற்சமயம் வழக்கு பதியப்பட்டுள்ளது. படத்தின் கதைப்படி பிராமண குடும்பத்தில் பிறக்கும் அன்னப்பூரணி சமையலில் சாதிக்க ஆசைப்படுகிறார்.
அதற்காக அசைவம் சாப்பிடுகிறார். மேலும் இஸ்லாமிய பையனை காதலிக்கிறார். பிரியாணி செய்வதற்காக தொழுகை செய்கிறார். இது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. மேலும் அதில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் இருக்கும் ஜெய் பேசும்போது ராமர் அசைவம் சாப்பிட்டதாக பேசியிருப்பார்.
அது பகவானை கலங்கப்படுத்துவதாக உள்ளது என கூறி அந்த திரைப்படம் குறித்து இந்து அமைப்பினர் மும்பையில் வழக்கு பதிந்துள்ளனர். பொதுவாகவே பக்தாள் வழக்கு தொடர்ந்தார்கள் என்றால் அந்த படத்திற்கு தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.
ஆனால் இவர்கள் இதை படம் வெளியாகும்போதே செய்திருந்தால் அது படத்திற்கு நல்ல விளம்பரமாக இருந்திருக்கும்.
இப்படி ஓ.டி.டியில் வந்த பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனரே என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. ஏனெனில் அன்னப்பூரணி படத்தை பொறுத்தவரை அதில் இந்து இஸ்லாமிய சகோதரதுவத்தை வெளிப்படுத்தும் விதமாகவே கதை இருந்ததே தவிர இழிவுப்படுத்தும் வகையில் ஒன்றும் இல்லை.
மேலும் அன்னப்பூரணி என்னும் கடவுள் அனைத்து உணவுக்குமான கடவுளே தவிர சைவத்திற்கு மட்டுமே அவர் கடவுள் கிடையாது என்பது தென்னிந்திய மக்களின் வாதமாக இருக்கிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்