Connect with us

அப்பாவுக்கு வர வேண்டிய கமிஷன் காசில் கையை வச்சிட்டியேப்பா!.. தந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய தனுஷ்!..

kasturi raja dhanush

News

அப்பாவுக்கு வர வேண்டிய கமிஷன் காசில் கையை வச்சிட்டியேப்பா!.. தந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய தனுஷ்!..

Social Media Bar

Dhanush: தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் சினிமாக்களில் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். முக்கியமாக அவர் வெற்றிமாறனுடன் காம்போ போட்டு நடிக்க துவங்கியதில் இருந்து வித்தியாசமான திரைப்படங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில் தற்சமயம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருக்கிறது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை கனெக்ட் மீடியா என்னும் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

dhanush
dhanush

இந்த நிலையில் கனெக்ட் மீடியா நிறுவனத்திற்கு பல காலங்களாகவே தனுஷை வைத்து படம் தயாரிக்க ஆசை இருந்து வந்ததாம். ஆனால் இது ஒரு மும்பையை சேர்ந்த நிறுவனம். எனவே கஸ்தூரி ராஜாவிடம் பேசிய கனெக்ட் மீடியா தனுஷிடம் வாய்ப்பை வாங்கி தந்தால் கமிஷன் தருவதாக பேசியிருக்கிறது.

சரி என்று தக்க சமயத்திற்காக காத்திருந்துள்ளார் கஸ்தூரி ராஜா. இந்த நிலையில் சில வாரங்களுக்கு பிறகு மெதுவாக கனெக்ட் மீடியாவில் படம் நடிப்பது குறித்து தனுஷிடம் கேட்டுள்ளார் கஸ்தூரி ராஜா. அதற்கு பதிலளித்த தனுஷ் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் படத்தில் கமிட் ஆகிவிட்டேனே என கூறியுள்ளார்.

கஸ்தூரி ராஜா மூலமாக ஒன்றும் முடியவில்லை என்றதுமே வேறு சோர்ஸ் மூலமாக தனுஷிடம் வாய்ப்பை பெற்றுள்ளது கனெக்ட் மீடியா நிறுவனம். இது தெரியாமல் கஸ்தூரி ராஜா கமிஷனுக்காக தனுஷிடம் பேசி கொண்டிருந்திருக்கிறார். இந்த விஷயத்தை வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ளார்.

To Top