நடிகர் தர்ஷன் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஹவுஸ் மேட்.
இந்த திரைப்படத்தில் வினோதினி, தீனா என்று இன்னும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இயக்குனர் டி ராஜவேல் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
வழக்கமாக இருக்கும் பேய் படங்களிலிருந்து வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு படமாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் இருக்கிறது. படத்தின் கதையை பொருத்தவரை தர்ஷனுக்கு வெகு நாட்களாக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
இந்த நிலையில் அவர் ஒரு வீட்டை வாங்கி குடியேறுகிறார். ஆனால் அங்கு தொடர்ந்து அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்வதில் துவங்கி இதில் எப்படி காலி வெங்கட் வந்து சேர்கிறார் என கதை செல்கிறது.
சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை தான் தயாரித்து வருகிறார். எனவே இந்த படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.