சினிமா மேலயே காண்டுல இருந்தேன்? –  சோகம் நிறைந்த ஆரம்பக்கால ஏ.ஆர் ரகுமானின் திரைவாழ்க்கை தெரியுமா?

தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் ரகுமான். ரகுமான் முதன் முதலில் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்த போது அதுவரைக்கும் இருந்த இசை ட்ரெண்டை மொத்தமாக மாற்றி அமைத்தார் என கூறலாம்.

அப்படியாக தமிழ் சினிமாவிற்குள் வந்த போதே ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்போது அவர் பெரும் இசையமைப்பாளாராகி விட்டார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எல்லாம் இப்போது இசையமைத்து வருகிறார்.

ஆனால் ஆரம்ப காலங்களில் அவரது வாழ்க்கை மிகவும் சோகமாக இருந்தது. சிறு வயதிலேயே இசை துறைக்குள் வந்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதாவது அவரது 10 ஆவது வயதிலேயே இசைக்குள் வந்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பதற்காக முயற்சி செய்து வந்தார்.

ஆனால் அவருக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. சரி இசையை விட்டு சென்றுவிடலாம் என அவர் யோசிக்கும்போதுதான் இசையை தவிர வேறு என்ன நமக்கு தெரியும் என்ன தெரியும் என்கிற கேள்வி அவருக்கு வந்துள்ளது.

ஆனால் கடுமையான வறுமையில் சிக்கியிருந்தார் ஏ.ஆர் ரகுமான். அப்போது ஒரு முடிவெடுத்தார், அதாவது கடவுள் தமக்கு கொடுப்பதை ஏற்றுக்கொள்வது, கடவுளுக்கு தெரியும் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று என்ற நம்பிக்கையில் சினிமாவிலேயே இருந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

அதன் பிறகு இயக்குனர் மணிரத்னம் மூலமாக முதல் வாய்ப்பை பெற்றார் ஏ.ஆர் ரகுமான். முதன் முதலில் ரோஜா படத்தில் இசையமைத்தார். அந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதற்கு பிறகு சினிமாவில் பெரும் இசையமைப்பாளர் ஆனார் ஏ.ஆர் ரகுமான்.

Refresh