Connect with us

ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்!.. வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

Cinema History

ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்!.. வசூலில் சாதனை படைத்த ஜெயிலர்.. எவ்வளவு தெரியுமா?

Social Media Bar

வசூலில் சாதனை படைப்பதற்காகவே தமிழில் குறிப்பிட்ட சில நடிகர்கள் உள்ளனர். அவர்களில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமானவர். தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு நடிகரும் 70 வயதை கடந்தும் கதாநாயகனாகவே நடித்து வந்ததில்லை.

அப்படி தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதற்கு நடுவே இயக்குனர் நெல்சன், ரஜினி இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக ஜெயிலர் இருந்தது. ஏனெனில் இதற்கு முன்னால் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் பெரிதாக வெற்றியை தரவில்லை.

எனவே அடுத்து ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ரஜினிகாந்த். அதே போல இயக்குனர் நெல்சனுக்கும் அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனையடுத்து ரஜினி படமும் ஒழுங்காக ஓடவில்லை என்றால் அது நெல்சனின் திரை வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் வெகு நாட்களை எடுத்துக்கொண்டு ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி முடித்தார் நெல்சன். ஆனால் வெளியான நாள் முதல் எதிர்பார்த்ததை விடவும் மெஹா ஹிட் படமாக அமைந்துவிட்டது ஜெயிலர் திரைப்படம்.

முதல் ஒரு வாரத்திலேயே படம் 200 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்சமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் வசூல் நிலவரத்தை வெளியுட்டுள்ளது. அதன்படி 525 கோடியை தாண்டி பெரும் வெற்றியை கொடுத்துள்ளது ஜெயிலர் திரைப்படம் என தெரிகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top