News
நீங்கள் இசையமைத்த படங்களுக்கு காப்பிரைட் வைத்துள்ளீர்களா? இளையராஜா பிரச்சனை குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். கடந்த சில நாட்களாக நடந்து வரும் காப்புரிமை பிரச்சனை குறித்து அவர் தற்சமயம் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தனக்குதான் வேண்டும் என கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வெகு காலமாகவே நிலுவையில் சென்று கொண்டுள்ளது. ஆனால் ஒரு பாடலுக்கு இசை மட்டும் முக்கியம் கிடையாது. பாடல் வரிகளும் முக்கியம்தான் என இதுக்குறித்து வைரமுத்து தனது கருத்தை முன் வைத்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார் கங்கை அமரன். இந்த பிரச்சனை இப்படியாக விஸ்வரூபம் எடுக்க பிரபலங்கள் பலருமே இதுக்குறித்து பேச துவங்கினர். இந்த நிலையில்தான் ஜேம்ஸ் வசந்தன் இதுக்குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது ராயல்டிக்கும் காப்பிரைட்டுக்கும் வித்தியாசம் உண்டு. வெளிநாடுகளில் உள்ள இசையமைப்பவர்கள் போல இங்கு தனியாக இசையமைப்பதில்லை. எனவே சட்டங்கள் வெளிநாட்டில் இருந்து இங்கு மாறுப்படுகிறது. இதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்கிறார்.
இந்த நிலையில் ஜேம்ஸ் வசந்தனிடம் தினேஷ் குமார் என்பவர் நீங்கள் இசையமைத்த படங்களுக்கு காப்பிரைட் மற்றும் ராயல்டி வைத்து இருக்கிறீர்களா? இல்லையா? என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன் நான் இசையமைத்த படங்களின் காப்புரிமை தயாரிப்பாளர் மூலமாக பதிப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்றுவிட்டன.
ராயல்டி மாதந்தோறும் தவறாமல் என் வங்கி கணக்குக்கு வருகிறது என கூறுகிறார்.
