News
தமிழ்ல நடிக்க வைக்க இருந்த தங்கத்தை தெலுங்கு சினிமா தூக்கிடுச்சு! – பட அப்டேட் கொடுத்த ஸ்ரீ தேவி பொண்ணு!
தமிழில் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. ரஜினி,கமல் காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். அதிலும் மூன்றாம் பிறை திரைப்படத்தில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அப்போதைய இளைஞர்களுக்கு கனவு கன்னியாக இருந்தார் ஸ்ரீ தேவி. ஆனால் இறுதியில் ஹிந்தி சினிமா நடிகரான போனி கபூரை இவர் திருமணம் செய்தார். போனி கபூர் தற்சமயம் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரும் கூட ஹிந்தி சினிமாவிலேயே வளர்ந்து வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிப்பதற்கு அவரிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் ஜான்வி கபூர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
முதலில் பையா 2 திரைப்படத்தில் இவரை நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் இறுதியில் ஜான்வி கபூர் தற்சமயம் ஜுனியர் என்.டி.ஆரின் 30 வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிப்பு வந்துள்ளது.
